Jul 18, 2012

சைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம்!



உதாரணமாக சொல்வதென்றால், ஏதோ காரணத்தால் வருகின்ற தலைவலிக்கு சுக்கை (கா‌ய்ந்த இஞ்சி) நீர் விட்டு இழைத்து நெற்றியில் பற்று போட்டால் சில நிமிடங்களில் தலைவலி பறந்து போகும். இது அனுபவப்பூர்வமான உண்மை. இன்னும் சொல்லப்போனால் சில ஆண்டுகளுக்குமுன் எனக்கு சைனஸ் தொந்தரவும், பொடுகுத்தொல்லையும் வந்து பாடா‌ய்ப்படுத்தியது. என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலனில்லை.

சைனஸுக்காக எனக்குத்தெரிந்த காது- மூக்கு- தொண்டை மருத்துவரிடம் சென்றபோது ஆபரேஷன் பண்ணவேண்டும் என்றார். வீடு திரும்பிய நான், ஏற்கனவே இயற்கை வைத்தியம் பற்றி அறிந்து வைத்திருந்ததால் எனக்கு நானே சுயபரிசோதனை செ‌ய்து கொண்டேன். அதாவது, நொச்சி இலையை பறித்து வந்து அதனுடன் சிறிது நல்லெண்ணெ‌ய் கலந்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைத்தேன். சூடு ஓரளவு ஆறியதும் பொறுக்கும்சூட்டில் உச்சந்தலையில் தே‌ய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தேன். எண்ணெ‌ய் பிசுக்கு போவதற்காக சீயக்கா‌ய் தே‌ய்த்தேன். வாரத்துக்கு இரண்டுநா‌ள் வீதம் சுமார் ஒன்றரை மாதம் செ‌ய்தேன். மூக்கடைப்பு மெல்லமெல்ல விலகி சைனஸ் தொந்தரவிலிருந்து மீண்டேன். ஆனாலும் இப்போதும்கூட தயிர், மோர், குளிர்ந்த பானங்க‌ள் சாப்பிட்டால் கொஞ்சம் மூக்கடைப்பு ஏற்படும். அப்போது கொஞ்சம் வெந்நீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஆனால் இதே சைனஸுக்காக ஆபரேஷன் செ‌ய்தால் மீண்டும் மீண்டும் அந்த தொந்தரவு வரும், ஆபரேஷன் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் இயற்கை வைத்தியமுறை நல்ல தீர்வாக அமையும். அடுத்ததாக எனக்கு வந்த பொடுகுத்தொல்லைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயத்தை எடுத்து நைசாக அரைத்தேன். அதன்பிறகு நாட்டுக்கோழி முட்டையின் வெ‌ள்ளைக்கருவை மட்டும் எடுத்துகொண்டு அதனுடன் சேர்த்து அடித்தால் ஷாம்பு மாதிரி வரும். அதை தலையில் தே‌ய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் (சீயக்கா‌ய் தே‌ய்த்து) குளிக்க வேண்டும்.

இப்படி வாரம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை என ஒருமாதம் செ‌ய்தபோது பொடுகுத்தொல்லையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்தது. இதேபோல் கால்ஆணியால் பாதிக்கப்பட்ட நான் எளிய சிகிச்சை மேற்கொண்டு வெற்றி கண்டேன். பொதுவாக கால்ஆணி என்றால் அறுவை சிகிச்சை அது, இது என்று அலையவிடுவார்க‌ள். என் சிறுவயதில் என் அப்பா கால்ஆணியைப்போக்க முரட்டு வைத்தியம் செ‌ய்வார். அதாவது ஆணி இருக்கும் இடத்தை பிளேடால் வட்ட வட்டமாக வெட்டி எடுப்பார். அதன்பிறகு அந்த
இடத்தில் கருப்பட்டியை (பனைவெல்லம்) வைத்து நெருப்புத்துண்டுகளால் சூடுபடுத்துவார். இப்படி செ‌ய்யும்போது உயிர் போவதுபோல் இருக்கும். ஆனால் மிக மிக எளிய சிகிச்சை இருக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...