Oct 1, 2012

பூமியை நோக்கி வரவுள்ள மிகப்பெரிய வால்வெள்ளி - சந்திரனைவிட 15 மடங்கு பெரியது!
[Monday, 2012-10-01
நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளது. இந்த வால் நட்சத்திரத்துக்கு வானியலாளர்கள் "இஸ்கான்' என பெயரிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்தை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும்.
இது நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வால் நட்சத்திரத்தை ரஷியாவைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல் ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம்

போதிய இடைவெளி விட்டு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்


வெள்ளிக்கிழமை, 28 செப்ரெம்பர்
உடல் எடையை குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து என்கின்றனர் ஆய்வாளர்கள்.லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
ஆய்வு அறிக்கையில், 3 வேளையை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து. கொஞ்சம், கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும்.
உடல் எடையும் சீராகும். உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்க வேண்டும், குறைவாக போதிய இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும்.
இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்




 திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர்
தற்போது நீரிழிவு நோய் முதியவர்கள் உட்பட இளைஞர்களையும் அதிகளவு தாக்குகிறது. எனவே அந்நோயை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 245 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
இளைஞர்களை சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் தூங்க வைத்தும், அதற்கு குறைவான நேரம் உறங்க வைத்தும் ஆராய்ச்சி செய்தனர்.
இதில் நீண்ட நேரம் தூங்கும் நபர்களை நீரிழிவு நோய் தாக்காது என கண்டறிந்துள்ளனர்.
இதற்கு காரணம் அவர்களது உடலில் இன்சுலின் குறைந்த அளவே சுரக்கின்றது.
ஆய்வு குறித்து தலைவர் கரீன் மேத்யூஸ் கூறுகையில், பொதுவாக இளைஞர்கள் இரவில் 6 மணி நேரம் தூங்குகின்றனர். அதன் மூலம் இன்சுலின் சுரப்பது 9 சதவிகிதம் கட்டுப்படுத்தப்படுகிறது.
எனவே நீண்ட நேரம் தூங்குபவர்கள் எதிர்காலத்தில் நீரிழிவு நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Lipstick பயன்படுத்தும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை


சனிக்கிழமை, 29 செப்ரெம்பர்
வேலைக்கு செல்பவர்களோ, இல்லத்தரசிகளோ திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது Lipstick இன்றி வெளியே கிளம்புவதில்லை.அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
Lipstickக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். Lipstickக்கில் உள்ள டிரைக்ளோசன்(triclosan) என்ற ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களில் அனைத்திலும் உள்ளது.
இந்த ரசாயனம் இருதயம் உட்பட மூளையிலிருந்து செய்திகளை வாங்கும்
போலியான கணக்குகளை நீக்குவதில் பேஸ்புக் தீவிரம்
[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர்
குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமான சமூவலைத்தளமான பேஸ்புக், போலியான பெயர்களில் தொடங்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கணக்குகளை நீக்குவதில் தீவிரமாக உள்ளது.இப்போலியான கணக்குகளை பயன்படுத்தி சமூசச் சீரழிவு, அரசியல்வாதிகளை பழிவாங்குதல், தனிப்பட்ட நபர்களை பழிவாங்குதல் போன்ற செயல்கள் அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.
அத்துடன் குறைந்தளவான Like இனை கொண்டிருக்கும் பேஸ்புக் பக்கங்களும் நீக்கப்படவுள்ளது.
எனினும் பேஸ்புக் தளத்தில் கணக்கு ஒன்றினை உருவாக்கிக் கொள்ள முடிவதனால், நீக்கப்பட்ட கணக்குகளின் பெயரில் புதிய கணக்குகள் உருவாக்கப்படலாம்.

Appendicitis பிரச்னையா? மருந்து மூலம் குணப்படுத்தலாம்: சுவீடன் ஆய்வாளர்கள்


 ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
Appendicitis எனப்படும் குடல் வால்வு பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக உள்ள நிலையில் மருந்து மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சுவீடன் நாட்டைச் சேர்ந்த கோதன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜென்னட் ஹான்சன் தலைமையில் Appendicitis குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுகுறித்து ஜென்னட் கூறுகையில், பெருங்குடலின் கீழ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறு டியூப் வடிவில் பை போன்ற அமைப்பே Appendicitis எனப்படுகிறது.
இதில் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வயிற்று வலி, வாந்தி

இரும்புச்சத்துள்ள உணவுகள்


[ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012,
உடல் பருமன் அதிகமாக உள்ளது என்பதற்காக, உணவில் மிகவும் கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டியுள்ளது.அவ்வாறு உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில், உடலுக்கு தேவையான ஒரு சில சத்துக்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் மிகவும் முக்கியமான சத்துக்களான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்புகள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவற்றை தினமும் உடலில் சேர்க்க வேண்டும்.
அவ்வாறு சேர்த்தால் தான் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்கு

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரம் [ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012



நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்திற்கு இஸ்கான் என்று பெயரிட்டுள்ளனர்.
இதனை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இந்த நட்சத்திரம் நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள்

கவிழக் காத்திருக்கும் மத்திய அரசு…

October 1, 2012
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக ஜார்க்கண்ட் மாநில கட்சிகள் அறிவித்துள்ளன.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்ததால் மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. மற்றொரு கூட்டணிக் கட்சியான திமுகவோ, இந்த விவகாரத்தில்

ஜப்பான் அமைச்சரவை மாற்றம்


[ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012,
கிழக்கு சீன கடல் விவாகரம் தீவிரமடைவதை தொடர்ந்து,
ஜப்பான் அமைச்சரவை திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜப்பானில் ஜப்பான் ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ளது. தற்போதைய பிரதமராக யாஷிஹிட்டோ நௌடா உள்ளார். இன்று திடீரென அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.
அதன் படி நிதி அமைச்சராக கொர்கி ஜோஜிமா(Koriki Jojima), வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த கொய்ஜிரோ ஜெம்பா(Koichiro Gemba), கல்வி அமைச்சராக மகிக்கோ டானாக்கா(Makiko Tanaka) ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதற்கு முன்னதாக கிழக்கு சீன கடல் விவகாரம் தொடர்பாக பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...