Jan 14, 2013

உலகின் அதிக வயதானவராக கருதப்பட்ட 115 வயது 'ஜப்பான் பாட்டி' மரணம்!

உலகின் அதிக வயதானவராக கருதப்பட்ட 115 வயது 'ஜப்பான் பாட்டி' மரணம்!டோக்கியோ, ஜன. 13-

உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி (115 வயது). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார்.

இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர் கடந்த 27 நாட்களாக கருதப்பட்டார். கிழக்கு ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் மகனுடன் வாழ்ந்து வந்த கோட்டோ ஒக்குபோ 24.12.1897-ல் பிறந்தவர். சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கவாசாக்கியில் உள்ள மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

இவரது மறைவையடுத்து, உலகின் அதிக வயதான நபர் என்ற பெருமை, மத்திய ஜப்பானில் உள்ள கியோட்டோ பகுதியில் வாழ்ந்து வரும் ஜிரோமன் கிமுரா (115 வயது) என்பவரை சென்றடைந்துள்ளது.

ஆப்கானில் அமைதியை ஏற்படுத்த தலிபான்களுடன் பேச ஒபாமா - ஹர்சாய் முடிவு!

News Service ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தலிபான்களுடன் பேச்சு நடத்துவது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக கத்தாரில் அமைதிப் பேச்சு நடத்துவதற்கான அலுவலகத்தைத் திறக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 2014ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஒபாமா அறிவித்திருந்தார்.
  
படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாகவும், அதற்கு பிந்தைய ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் செயல்பாடு குறித்தும் முடிவு செய்வதற்காக அதிபர் ஹமீது கர்சாய் அமெரிக்கா சென்றுள்ளார். ஒபாமாவுடனும், அமெரிக்க அதிகாரிகளுடனும் மூன்று கட்டப் பேச்சுவார்த்தைக் கூட்டங்களை ஹமீது கர்சாய் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ஒபாமாவும், ஹமீது கர்சாயும் செய்தியாளர்களை கூட்டாகச்

நாய்க்கு சிகைஅலங்காரம் - சிங்கம் என்று பதறியடித்து ஓடிய மக்கள்!

News Service அமெரிக்காவின் விர்ஜினியா மாநில தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் இருந்து எராளமான அவசர உதவி(911) தொலைபேசி அழைப்புகள் வந்தன. காலை 10.20 மணிக்கு வந்த அழைப்பில், நார்ஃபோல்க் பகுதியில் இருந்து மிருகக் காட்சி சாலையில் தப்பிவந்த சிங்கம் தெருக்களில் நடமாடுவதாக ஒரு பெண் புகார் அளித்தார். அடுத்து வந்த அழைப்பில், பிடரியுடன் ஒரு சிங்கக்குட்டி, தங்கள் வீட்டின் அருகே சுற்றித்திரிவதாக ஒருவர் கூறினார்.
  
இதைப்போன்று தொடர்ந்து அழைப்புகள் வரவே, உஷாரான போலீசார், விர்ஜினியா மிருகக் காட்சி சாலை நிர்வாகிகளை தொடர்புகொண்டு, அங்குள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும்படி அறிவுறுத்திவிட்டு, புகார் வந்த நார்ஃபோல்க் பகுதிக்கு துப்பாக்கிகளுடன் விரைந்தனர்.வழியில் ஒருவர் சிங்கத்தை கட்டியிருந்த சங்கிலியை கையில் பிடித்தவாறு நடந்து போய்கொண்டிருந்தார். அவரை வழிமறித்த போலீசார்,

ஓசோன் அடுக்கு பாதிப்புக்கு முக்கிய காரணம் கடல் தான் - ஆய்வில் புதிய தகவல்


News Service பூமியில் உள்ள கடல்களில் இருந்து வெளியாகும் வாயு தான் ஓசோன் அடுக்கை பெருமளவில் பாதிப்புக்கு உட்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடலில் உள்ள உப்புக்களில் இருந்து வெளியாகும் அயோடின் ஆக்சைடு என்ற வாயுவில் அடங்கி உள்ள அயோடின் துகள்கள் தான் ஓசோன் அடுக்கை அதிகம் பாதிக்கிறது என நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இரட்டையர்கள் இரட்டையர்களை திருமணம் செய்து, இரட்டை குழந்தைகளைப் பெற்ற அதிசயம்


January 14, 2013
இரட்டையர்கள் இரட்டையர்களை திருமணம் செய்து, இரட்டை குழந்தைகளைப் பெற்ற அதிசயம்
பிரிட்டனில் இரட்டையராக பிறந்த இரு பெண்கள், தங்களைப் போலவே இரட்டையராக பிறந்த இரு ஆண்களை திருமணம் செய்து, அவர்களில் ஒரு தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தையாக பிறந்த அதிசயம் ஒன்று நடந்துள்ளது.



பிரிட்டனில் Darlene and Diane Nettemeier என்ற இரண்டு இளம்பெண்கள் இரட்டையர்கள். இவர்கள் 1998ல் Twinsburg, Ohio, என்ற இடத்தில் இரட்டையர்களுக்காக நடந்த ஒரு விழாவில் Mark and Craig என்ற இரட்டையர்களாக பிறந்த வாலிபர்களை சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 



இவர்கள் திருமணத்திற்கு பின்பு பிரியாமல் அருகருகே இரண்டு வீடுகள் கட்டி அதில் இணைபிரியாமல் சந்தோஷ வாழ்க்கை நடத்தினர். இவர்களில் Diane and Craig என்ற தம்பதிகளுக்க் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இரட்டை சந்தோஷம் அடைந்தனர். மேலும் இந்த இரண்டு தம்பதிகளுக்கு சேர்ந்து மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பம் போல ஒன்றாக வாழ்ந்து வருவதை அந்த ஊர் மக்களே கண்டு அதிசயித்தனர்.

விண்டோஸ் 7 செயல் குறிப்புகள்

Posted: 13 Jan 2013

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள் வரத் தொடங்கினாலும், தொடு திரை இல்லாத விண்டோஸ் 8 வேண்டாம் எனப் பலர் எண்ணுகின்றனர். 

இன்னும் பலர், நாம் முழுமையாகப் பயன்படுத்தாத விண்டோஸ் 7 சிஸ்டத்தையே தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று அதன் வசதிகளைக் குறித்து டிப்ஸ்களைக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில செயல் குறிப்புகளும், வசதிகள் குறித்த விளக்கங்களும் இங்கு தரப்படுகின்றன. 

1. சிஸ்டத்தின் நிலை என்ன?:

நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த நிலையில் உள்ளது என்று அறிய நாம் விரும்புவோம். விண்டோஸ் 7

Jan 13, 2013

தமிழர் திருநாளான 'பொங்கல்' பண்டிகைக்கான அலங்காரங்கள்

News Service
பொதுவாக பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளும் மிகவும் சுத்தமாக இருக்கும். ஏனெனில் மற்ற நேரங்களில் வீட்டை சுத்தம் செய்கிறோமோ இல்லையோ, பண்டிகை நாட்களில் நிச்சயம் செய்வோம். அதிலும் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் பண்டிகையன்று, அனைத்து தமிழர்களும் கண்டிப்பாக செய்வார்கள். ஏனெனில் பொங்கல் பண்டிகைக்கு முதள் நாள் வரும் போகியன்று அனைத்து பழைய பொட்களையும் வெளியேற்றிவிட்டு, பொங்கலன்று புதிய பொருட்களைப் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, நமது முன்னோர்கள் இவ்வாறு பொட்களை எரிக்கும் போது, நமது மனதில் இருக்கும் அனைத்து தீய எண்ணங்களும் எரித்துவிட்டு, பொங்கல் முதல் நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
   மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், அந்த நாளன்று தேவைப்படும் பொருட்களை முன்னரே வாங்கிக் கொண்டு, எந்த மாதிரியான அலங்காரம் எல்லாம் வீட்டில் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை உங்களுக்காக

கொத்தமல்லி கீரையின் மருத்துவ குணங்கள்..

News Service கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.
  
வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு,

சித்த மருத்துவத்தில் பூக்கும் மரங்களின் அரசு..!


News Service
பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு..!
பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை. பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால்

துாக்க மாத்திரை இல்லாமலே நிம்மதியான தூக்கத்தை தரும் மல்லிகை

News Service சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள்.
  
ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும்

தை பொங்கல் காட்சி



Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...