May 4, 2013

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் வசித்து வரும் அவருக்கு, இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை திரையுலக பிரமுகர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பார்த்து வருகின்றனர்.

dead_body தீக்காயங்களுடன் வயோதிபரின் சடலம் மீட்பு

dead_bodyயாழ்.நல்லூர் அரசடிப் பகுதியில் தன்னைத் தானே தீ மூட்டி  எரிந்துள்ள வயோதிபர் ஒருவரை சடலமாக யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அரசடியைச் சேர்ந்த நவரட்ணம் கணேசமூர்த்தி (வயது 55) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நல்லூர் அரசடிப் பகுதியில் தன்னைத் தானே தீ மூட்டி  எரிந்துள்ள வயோதிபர் ஒருவரை சடலமாக யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அரசடியைச் சேர்ந்த நவரட்ணம் கணேசமூர்த்தி (வயது 55) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கினிநாள் இன்று முதல் ஆரம்பம்: வெப்பநிலை அதிகரிப்பு


sun heat

வருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று 4ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவடைகின்றது.
இந்த அக்கினி நாள் காலங்களில் கிரகப் பிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட நாள்கள் எனவும், நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் (தானிய வகை) நாற்று நடும் வேலைகளை செய்யக் கூடாது எனவும், நிழல் தரு விருட்சங்களை கத்தி கொண்டு வெட்டி அழிக்கக் கூடாது என எமது இந்து மத சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருப்பதுடன், இயலுமான அளவு மரங்களை போஷிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கின்றன.
மேலும், ஆசியப் பிராந்தியத்தின் வெப்ப வலைய பகுதிகளில் சூரியனின் வெப்பம் மிக கடுமையான அளவு இருக்கும். எமது அண்டை நாடான இந்தியாவில் இக் காலப் பகுதியில் நிலவும் கூடுதலான வெப்பத்தினால் பலர் மரணிப்பதும் சில பிரதேச பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதும் உண்டு.
இந்த அக்கினி நாள் காலப் பகுதியிலேயே கிழக்கில் கண்ணகி அம்மன் சடங்குகள் இடம் பெறுவது வழக்கம், அம்மன் சடங்குகள் (வைகாசி பூரணை) இம் மாதம் 24ஆம் திகதி அக்கினி நாளின் அகோர வெப்பம் குறைவடையும் என்பது எமது பிரதேச மக்களின் நம்பிக்கையாகவும் இருந்து வருகின்றன.

May 3, 2013

இவர்கள்தான் மனிதர்கள் : வீடியோ



ரஷ்யாவின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் டாஷ்போர்ட் கமெராக்கள் வாகன விபத்துக்களையும், எரிநட்சத்திரங்களையும் மாத்திரமா படம்பிடிக்கும்? இல்லை.. ரஷ்யாவில் உள்ள நல்ல மனிதர்களின் உள்ளங்களையும் படம்பிடிக்கும் என்கிறது இவ்வீடியோ.
அடுத்தமுறை நீங்கள் வாகங்களில் செல்லும் போது உங்கள் வாகனத்திற்கு முன்னாள் இப்படி ஒரு சம்பவம் நேர்ந்தால், நீங்கள் ஓட்டுனராக இருக்கும் பட்சத்தில் அல்லது முன் சீட்டில் அமர்ந்திருக்கும் பட்சத்தில் என்ன செய்வீர்கள் என இந்த வீடியோவை பார்த்ததும் கற்றுக்கொள்வீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே : 2012இன் மிகச் சிறந்த நகரங்கள் 3


வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் இரண்டையும் சமாளித்து வாழும் மனிதனுக்கு வாழும் இடம் சுற்றம் தரமானதாக அமைத்துக்கொள்வது அவசியமாகிறது.
அவ்வகையில் நியூயோர்க் ஆலோசணை நிறுவனமான மெர்சர் (Mercer) ஓர் புதிய அனைத்துலக ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதாவது தரமான வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய நகரங்கள் எவை என அவ் ஆய்வு வெளிப்படுத்தியிருந்தது.

சீனாவின் குளிர்கால விந்தையுலகம் : ஜொலிக்கும் பனி மாளிகைகள்


சீனாவின் வடகிழக்கு ரஷ்ய எல்லையின் அருகே உள்ள ஹார்பின் நகரில் நடைபெரும் பனி மற்றும் ஸ்னோ விழா பிரபலமானது.
தற்போது 29வது ஆண்டு சர்வதேச பனி மற்றும் ஸ்னோ விழா ஜன 5ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெற்று பனிக்கட்டிகள் மூலம் மாளிகைகள், பிரமிடுகள் என மிகப்பெரிய அளவினான சிற்பங்கள் பலவற்றை கண்களுக்கு நல் விருந்தாக இங்கே காணலாம். இச் சிற்பங்கள் சிறப்பு LED விளக்குகள் பயன்படுத்தப்பட்டு பலவகையான நிறங்களில் ஜொலிப்பதனால் இரவில் மேலும் மெருகூட்டுடன் காட்சி தருகின்றன.  

பல்வேறு நாட்டுச் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிறந்த பனிச் சிற்பங்களை இங்கே

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்


ஜப்பானின் Tochigiஎனும் இடத்தில்  Ashikaga எனும் பூங்கா உள்ளது. இங்கேதான் உலகின் மிகவும் அழகான விஸ்டீரியா மரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மிகப் பழமையானதும் மிக விசாலமானதுமாக உள்ள இம் மரம் இப்பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுமார் 143 வயதான இந்த விஸ்டீரியா மரத்தின் கிளைகள் விட்டங்களின்

கலிபோர்னியாவின் தெற்கே கடும் காட்டுத் தீ : இயல்பு வாழ்க்கை பாதிப்பு


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென்பகுதியைத் தாக்கிய கடும் காட்டுத் தீயினால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் அங்கு முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டது மட்டுமன்றி பல்கலைக் கழகங்களில் இருந்து மாணவர்களும் வீடுகளில் இருந்து மக்களும் வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். கடற்கரை ஓரமாக அதிகபட்சமாக 15 சதுர மைல பரப்பளவில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

இது குறித்து தீயணைப்பு வீரர் ஒருவர் கூறுகையில் 'நாம் இயற்கை அண்னையின் கருணையை எதிர்பார்த்தே இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டு வருகின்றோம்!' என்றார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 900 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீயால் 8 மைல் நீளத்துக்கு பசுபிக் கடலோர அதிவேகப் பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடமேற்கே வெண்டுரா மாவட்டத்தில் வனங்களில் காற்றின் வேகத்தால் தீ வேகமாகப் பரவியிருந்தது. இந்தக் காட்டுத் தீ அனர்த்தத்தில் ஆயிரக் கணக்கான நிலங்களும், சில வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் அவர்களின் பணியும் தாமதம் அடைந்துள்ளது. இந்நிலையில் இத் தீ எந்நேரமும் எந்த இடத்திலும் பரவலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதேவேளை ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தில் சூடான நிலக்கரிப் படுக்கைகள் இருப்பதால் தீயின் வீரியம் இன்னமும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது.

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!


உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை
பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:
* தினமும் ஏதாவது ஒரு பழ ஜுஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜுஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

முதுமையை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியைக் கண்டு பிடித்து அசத்திய விஞ்ஞானிகள்!


மனிதனின் மூளையில் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஒருவர் முதுமை அடைவதைக் கடுப்படுத்தும் பகுதியை தாம் கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.


எலிகளில் செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
”நேச்சர்” என்னும் சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள்
வெளியிடப்பட்டிருக்கின்றன.
மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர்.
வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது.
ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் பெருமளவு சம்பந்தப்பட்டிருகிறது என்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது.
எலிகளின் மூளையின் இந்தப் பகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்தது.
வயதாகச் செய்யும் இரசாயனம்
அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரசாயனணத்தை தடுத்தால் அந்த எலி நீண்ட நாட்களுக்கு வாழ்வது கண்டறியப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியமான ஒரு எலி 600 முதல் 1000 நாட்கள் வரை உயிர்வாழும்.
ஆனால், இந்த மாற்றம் செய்யப்பட்ட எலி அதனைவிட ஐந்தில் ஒரு மடங்கு அதிகமான காலத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தது.
அதற்கு வயதானகாலந்த்துல் வரும் தசைகள் சுருங்குதல், ஞாபக மறதி போன்ற எந்தப் பிரச்சினையும் வரவில்லை.
அதேவேளை, அந்த ஹைபோதலமஸ் பகுதியில் அந்த இரசானத்தை விஞ்ஞானிகள் அதிகரித்தபோது, அந்த எலிகளின் வாழ்வுக் காலம் குறைந்துபோயிற்று.
அந்த நடைமுறையின் பின்னணியில் உள்ள உயிரியல் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கு தற்போது விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்.
இந்த ஆய்வுகள் முதுமையுடன் தொடர்புடைய பல நோய்கள் குறித்த புதிய தகவல்களை அறிய உதவும். அத்துடன் எதிர்காலத்தில் எமது வாழ்வுக் காலத்தை அதிகரிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கவும் இது உதவலாம்.

வீட்டில் தனியாக இருக்கும் போது


வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது என்ற எளிய வழிமுறையைக் காண்போம்.

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என்று உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்? துரதிஷ்டவசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்.
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
தற்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஓக்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இரும்புவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...