May 26, 2013

மின்னல் வேகம்: 2020 இல்!

செக்கனுக்குள் முழுத்திரைப்படத்தையே தரவிறக்கம் செய்யக்கூடிய மின்னல் வேக 5ஜி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக செம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் அறிவித்துள்ளது.

ஜிமெயில் + கூகுள் ட்ரைவ் இலவச சேமிப்பளவு 15 ஜிபி வரை அதிகரிப்பு


ஜிமெயில் மற்றும் கூகுள் ட்ரைவ் போன்ற பிரபல சேவைகளை வழங்கிவரும் கூகிள் நிறுவனம் அதன் இலவச சேமிப்பளவை 15 ஜிபி வரை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஜிமெயிலில் 15 ஜிபிவரையான அளவுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவுடன் இணைத்து சேமித்துவைக்க முடியும்.

அதாவது 5GB ஜிமெயிலிலும் 9GB கூகுள் ட்ரைவுடன் சேமிக்க முடியும்.

தற்போது குறிப்பிட்ட பயனாளருக்கு மட்டுமே விரிவு படுத்தப்பட்டுள்ள இலவச சேமிப்பளவு விரைவில் அனைவருக்கும் கிடைக்குமென தெரிவிக்கின்றது கூகிள் நிறுவனம்.

இது தொடர்பான கூகிளின் அறிவிப்பு இங்கே :

உயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற



கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். 

இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி http://bookboon.com.

இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். 
தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 
உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. 
கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது. கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: ஐந்தாம்திருவிழா

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: ஐந்தாம்திருவிழா

வெள்ளி, வியாழன், புதன் முக்கோண பாதையில் காட்சி : வானில் அரிய காட்சி!

May 25, 2013 
வெள்ளி, வியாழன், புதன் முக்கோண பாதையில் காட்சி : வானில் அரிய காட்சி!
வெள்ளி, வியாழன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கோண பாதையில் ஒன்றாகக் காட்சியளிக்கும்  அரியதொரு நிகழ்வை  இலங்கையர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
இதனை நாளையும், நாளை மறுதினமும் வானில் காணமுடியும்.
இம் மூன்று கிரகங்களும், சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வானத்தின் வடமேல் திசையில் தென்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சூரிய அஸ்தமனமாகி 30-45 நிமிடங்களில் இவற்றை தெளிவாக காணமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்றதொரு காட்சியை நாம் மீண்டும் 2026 ஆம் ஆண்டிலேயே காணமுடியுமென விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதுமட்டுமன்றி எதிர்வரும் சில தினங்களுக்கு இக்கோள்களை வெறும் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்கள் தத்தமது சுற்று வட்டப்பாதையில் ஒன்றை ஒன்று நெருங்கி வருவதை கடந்த சில வாரங்களாக காணக்கூடியதாகவுள்ளதாகவும் தற்போது புதனும் அவற்றுக்கு நெருங்கி வருவதால் முக்கோண பாதையில் அவை காட்சியளிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பார்வைக்கு இவ்வாறு தோன்றிய போதிலும்  இவற்றுக்கிடையிலான உண்மையான தூரம் பல மில்லியன் கிலோமீற்றர்களாகும். இலங்கை மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் உள்ளோர் இக்காட்சியை கண்டுகளிக்கவுள்ளனர்.
இதேபோன்று இன்று வானத்தில் சந்திரகிரகணமொன்று ஏற்படவுள்ளதாகவும் இதை அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ளோர் தெளிவாகக் காணமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Nainai Billayar ther 14/04/2013

http://www.youtube.com/user/nainativuorg?feature=watch

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: ஐந்தாம்திருவிழா

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: ஐந்தாம்திருவிழா
http://dan-adams-video-guide-sc-ta-yt.blog.ilchol.com/2004/04/28/velanai%20pillaiyar%20idapa%20vaganam+cxHmX7iR4X8/

May 25, 2013

ஏழரைச் சனி என்ன செய்யும்?

ஏழரைச் சனி என்ன செய்யும்? 
ஏழரைச் சனி என்ன செய்யும்? காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப்பூர்வமாகப் பேச வைக்கிறது. இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்... உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். 

சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்... எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் போட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்... எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’

கனடாவில் சுமார் இருபது ஹரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம்


அட்லாண்டிக் கனடா பகுதியை வருகின்ற யூன் மாதம் முதல் அடுத்தடுத்து 13 முதல் 20 அரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடாவின் அரிக்கேன் மையமும், அமெரிக்காவில் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக மையமும் அறிவித்துள்ளது.தொடர்ந்து அரிக்கேன் புயல் இப்பகுதியைத் தாக்குவது தெரிந்த தகவல் என்றாலும் நாம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும் என்று கனடா மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கனடா மையத்தின் திட்டக் கண்காணிப்பாளர் கிறிஸ் போகர்ட்டி(Chris Fogarty) கூறுகையில், வருகின்ற யூன் மாதம் முதல் வீச போகும் அரிக்கேன் புயல்களில் மூன்று முதல் ஆறு புயல்கள் பெரும் புயல்களாகவும், அடுத்த பதினோரு புயல்கள் சாதாரணமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க நிறுவனம் புயல் பற்றிய தனது அறிக்கையில், வருடந்தோறும் ஆறு அரிக்கேன் புயல்களும், மற்ற மூன்று பெரும் புயல்களுடன் மணிக்கு 175 கி.மீற்றர் வரை வீசும் புயல்காற்றும் உண்டு என்று தெரிவித்துள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...