May 26, 2013

Synei

Synei

Mobile Phone -களின் ரகசிய குறீயீடுகள் (Secret Codes)

Secret codes of LG, NOKIA, SAMSUNG Mobile Phones

பொதுவாக மொபைல் பயனர்கள் அவர்கள் பயன்படுத்தும் மொபைலைப் பற்றிய ஒரு சில தகவல்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் மொபைல்களைப் பற்றிய அடிப்படைத் தன்மை தகவல்களை அறிவதற்கான  குறியீடுகளைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் அதுபற்றிய தேவைகள் இருப்பதில்லை. என்றாலும் ஒரு சில அதிமுக்கியமான மொபைல் பற்றிய அடிப்படையான குறியீடுகளை (secret codes of mobile phones) இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  
secret codes of mobile phones

LG Mobile Phone -களின் ரகசிய குறீயீடுகள் (Secret Codes)

  • LG Phone-ன் TEST MODE செல்ல 2945*#*# என்ற குறியீட்டை அழுத்தவும்.
  • LG Phone-ன் ரகசிய மெனுவை காட்சிப்படுத்த 2945*#01*#
  • LG Phone-ன் சாப்ட்வேர் தொகுப்பின் Register Number தெரிந்துகொள்ள *8375# அழுத்தவும்.
  • LG Phone-ன் Sim card lock manage செய்ய 2945#*70001# (மாடல் 7010, 7020க்கு மட்டும்)
  • LG Phone-ன் Sim card lock manage செய்ய 1945#*5101# (LG Mobile model 5200, 510க்கு மட்டும்)
  • LG Phone-ன் Sim card lock manage செய்ய 2947#* (போன் மாடல் 500, 600 மட்டும்)

Samsung Phone களுக்கான ரகசிய குறீயீடுகள் (Secret Codes)

  • Samsung Phone - ன் Mobile Software Register Number கண்டறிய *#9999# என்ற குறீயீடு பயன்படும்.
  • Samsung Phone - ஐ ரீபூட்(Reboot) செய்திட #*3849# என்ற குறியீடுகள் பயன்படும்.
  • Samsung Phone - ஐ ON/OFF செய்திட #*2558# என்ற குறியீடு பயன்படும்.
  • Samsung Phone - ஐ Unlock செய்ய #*7337# என்ற குறியீடு பயன்படும்.
  • Samsung Phone - ன் GSM வசதிகளை நிறுத்தவும், தொடங்கவும்(ON/OFF) செய்வதற்கு #*4760# பயன்படும்.
  • Samsung Phone - ன் Memory, Battery குறித்த தகவல்களைப் பெற *#9998*246# என்ற எண் பயன்படும்.
  • Samsung Phone - ன் Locking தன்மையை அறிய *#7465625# என்ற குறியீடுகள் பயன்படும்.
  • Samsung Phone - ன் Code Number - ஐ அன்லாக் செய்திட *2767*637#
  • Samsung Phone - ன் Mobile Storage தன்மையை அறிய *#8999*636#
  • Samsung Phone - களை Reboot செய்திட *2562# என்ற இந்த எண் பயன்படும்.

பிரபலமான நோக்கியா போன்களுக்கான ரகசிய குறியீடுகள்:

NOKIA PHONE SECRET CODES

  • Nokia Phone - ன் Battery settings ஏற்படுத்த *#7780# என்ற குறியீடு பயன்படும்.
  • Nokia Phone - ன் Product Date தெரிந்துகொள்ள *#3283#
  • Nokia Phone - ன் Sim Clock -ஐ நிறுத்த *#746025625#
  • Nokia Phone - ன் தோன்றும் Operator Logo -வை வராமல் தடுக்க *#67705646# என்ற குறியீடு பயன்படும்.
  • Nokia Phone - ன் case Core, Phone Timer Reset செய்ய *#73# என்ற குறியீடு பயன்படும்.
  • Nokia Phone - ன் Mobile Software Version  -ஐ அறிய *#0000# என்ற குறியீடு பயனுள்ளதாக இருக்கும்.
  • Nokia Phone - ன் Mobile warrenty settings அறிந்துகொள்ள *#92702689# இந்த குறியீடு பயன்படும். இதில் பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பெறும். 
இந்த தகவல்கள் உங்களுக்குப் பயன்மிக்கதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நன்றி.

மின்னல் வேகம்: 2020 இல்!

செக்கனுக்குள் முழுத்திரைப்படத்தையே தரவிறக்கம் செய்யக்கூடிய மின்னல் வேக 5ஜி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக செம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் அறிவித்துள்ளது.

ஜிமெயில் + கூகுள் ட்ரைவ் இலவச சேமிப்பளவு 15 ஜிபி வரை அதிகரிப்பு


ஜிமெயில் மற்றும் கூகுள் ட்ரைவ் போன்ற பிரபல சேவைகளை வழங்கிவரும் கூகிள் நிறுவனம் அதன் இலவச சேமிப்பளவை 15 ஜிபி வரை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஜிமெயிலில் 15 ஜிபிவரையான அளவுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவுடன் இணைத்து சேமித்துவைக்க முடியும்.

அதாவது 5GB ஜிமெயிலிலும் 9GB கூகுள் ட்ரைவுடன் சேமிக்க முடியும்.

தற்போது குறிப்பிட்ட பயனாளருக்கு மட்டுமே விரிவு படுத்தப்பட்டுள்ள இலவச சேமிப்பளவு விரைவில் அனைவருக்கும் கிடைக்குமென தெரிவிக்கின்றது கூகிள் நிறுவனம்.

இது தொடர்பான கூகிளின் அறிவிப்பு இங்கே :

உயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற



கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். 

இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி http://bookboon.com.

இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். 
தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 
உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. 
கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது. கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: ஐந்தாம்திருவிழா

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: ஐந்தாம்திருவிழா

வெள்ளி, வியாழன், புதன் முக்கோண பாதையில் காட்சி : வானில் அரிய காட்சி!

May 25, 2013 
வெள்ளி, வியாழன், புதன் முக்கோண பாதையில் காட்சி : வானில் அரிய காட்சி!
வெள்ளி, வியாழன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கோண பாதையில் ஒன்றாகக் காட்சியளிக்கும்  அரியதொரு நிகழ்வை  இலங்கையர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
இதனை நாளையும், நாளை மறுதினமும் வானில் காணமுடியும்.
இம் மூன்று கிரகங்களும், சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வானத்தின் வடமேல் திசையில் தென்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சூரிய அஸ்தமனமாகி 30-45 நிமிடங்களில் இவற்றை தெளிவாக காணமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்றதொரு காட்சியை நாம் மீண்டும் 2026 ஆம் ஆண்டிலேயே காணமுடியுமென விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதுமட்டுமன்றி எதிர்வரும் சில தினங்களுக்கு இக்கோள்களை வெறும் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்கள் தத்தமது சுற்று வட்டப்பாதையில் ஒன்றை ஒன்று நெருங்கி வருவதை கடந்த சில வாரங்களாக காணக்கூடியதாகவுள்ளதாகவும் தற்போது புதனும் அவற்றுக்கு நெருங்கி வருவதால் முக்கோண பாதையில் அவை காட்சியளிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பார்வைக்கு இவ்வாறு தோன்றிய போதிலும்  இவற்றுக்கிடையிலான உண்மையான தூரம் பல மில்லியன் கிலோமீற்றர்களாகும். இலங்கை மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் உள்ளோர் இக்காட்சியை கண்டுகளிக்கவுள்ளனர்.
இதேபோன்று இன்று வானத்தில் சந்திரகிரகணமொன்று ஏற்படவுள்ளதாகவும் இதை அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ளோர் தெளிவாகக் காணமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Nainai Billayar ther 14/04/2013

http://www.youtube.com/user/nainativuorg?feature=watch

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: ஐந்தாம்திருவிழா

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்: ஐந்தாம்திருவிழா
http://dan-adams-video-guide-sc-ta-yt.blog.ilchol.com/2004/04/28/velanai%20pillaiyar%20idapa%20vaganam+cxHmX7iR4X8/

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...