Jul 21, 2013

முதுமை காரணமாக இளவரசர் பிலிப்பிற்கு முடிசூட்டி மகிழ்ந்த பெல்ஜியம் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்

முதுமை காரணமாக இளவரசர் பிலிப்பிற்கு முடிசூட்டி மகிழ்ந்த பெல்ஜியம் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்மகன் ஃபிலிப்பின் கரத்தை ஏந்திப் பிடிக்கிறார் மன்னர் ஆல்பர்ட்ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட் (79), முதுமை காரணமாக மன்னர் பட்டத்தை தனது மகன் பிலிப்பிற்கு இன்று சூட்டி வைத்தார்.

ஜனநாயக மரபுகளின்படி 20 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிய மன்னர் இரண்டாம் ஆல்பர்ட், பாராளுமன்றத்தில் மன்னருக்கான தனது அதிகாரங்களை இன்று துறப்பதாக பிரதமர் எல்யோ டி ருப்போ முன்னிலையில் கையொப்பமிட்டார்.

இதனையடுத்து, மன்னரின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாக புதிய மன்னர் பிலிப் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பெல்ஜியம் நாட்டின் தேசிய தினமான இன்று புதிய மன்னரின் பதவியேற்பு விழா நடைபெற்றதால் பாராளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த ராணுவ அணிவகுப்பையும் புதிய மன்னர் பிலிப் ஏற்றுக் கொண்டார்.

மன்னர் பதவியை துறக்கப்போவதாக இரண்டாம் ஆல்பர்ட் அறிவித்த சுமார் 3 வாரங்களுக்குள் இன்றைய விழா நடைபெற்றதால் அயல்நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மொழிவாரி பிரச்சினைகளால் பிளவுபட்டு கிடக்கும் பெல்ஜியத்தின் பாராளுமன்ற தேர்தலை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நடத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு புதிய மன்னர் பிலிப்பை எதிர் நோக்கியுள்ளது.

அத்துடன் டச்சு மொழி பேசும் 60 லட்சம் மக்களுக்கும், பிரெஞ்சு மொழி பேசும் 45 லட்சம் மக்களுக்கும் தன்னாட்சி உரிமையுடன் கூடிய தனி மாநிலங்களை பிரித்து வழங்க வேண்டிய கடமையும் அவருக்காக காத்திருக்கிறது.

பெல்ஜியம் பாராளுமன்ற வாசலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய மன்னருக்கு மகிழ்ச்சியுடன் கரங்களை அசைத்து நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்
.

GIANT Tsunami super WAVE

கொக்குவில் சாயீதுர்க்கா தேர்த்திருவிழா 21.07.2013

Jul 19, 2013

ஐந்து வயதை எட்டிய ஆப்பிள் ஸ்டோர் Posted: 18 Jul 2013


2008 ஆம் ஆண்டு இணைய வெளியில், ஆப்பிள் சாதனங்களுக்கான புரோகிராம்களை பதிந்து வாடிக்கை யாளர்களுக்கு, இலவசமாகவும், கட்டணம் பெற்றும் தர தொடங்கிய ஆப்பிள் ஸ்டோர், தன் ஐந்தாவது ஆண்டினைத் தற்போது எட்டியுள்ளது. 

ஸ்மார்ட் போன், அழைப்புகளை ஏற்படுத்தவும், பெறவும், மின் அஞ்சல்களை அனுப்பிப் பெறவும், இணையத்தை உலா வர வும் மட்டும் பயன்படும் ஒரு சாதனம் என்ற நிலையை, இந்த ஆப்பிள் ஸ்டோர் மாற்றியது. 

குறிப்பாக, மொபைல் சாதனங்களுக்கான அப்ளிகேஷன்களை விற்பனை செய்திடும் ஒரு சந்தை என்ற செயலாக்கத்தை, ஆப்பிள் ஸ்டோர் தான் முதலில் ஏற்படுத்தியது. 

அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைவருக்கும் உரியதே என்ற கோட்பாட்டுடன், அனைத்தையும் ஓர் இடத்திற்குக் கொண்டு வந்து புதிய பாதையை உருவாக்கியது ஆப்பிள் ஸ்டோர். ""இதனைப் போல, இதற்கு முன் எதுவும் இருந்ததில்லை; 
அடிப்படையில் இது டிஜிட்டல் உலகை மாற்றியது'' என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். இதன் பின்னர் வந்த ""கூகுள் பிளே'' ஸ்டோர், பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் எண்ணிக்கையில், மிக அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும், முக்கிய அதிகப் பயனுள்ள பல அப்ளிகேஷன்களுக்கு, ஆப்பிள் ஸ்டோர் பெயர் பெற்று விளங்குகிறது. 
அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிறிய மற்றும் பெரிய அப்ளிகேஷன்களை மக்களுக்குச் சீராகவும், எளிதாகவும் வழங்குகிற முறையிலேயே, இது வெற்றி அடைய முடியும். 
ஆப்பிள் ஸ்டோரில் தற்சமயம் ஒன்பது லட்சம் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்டோரிலிருந்து 5 ஆயிரம் கோடி முறை புரோகிராம்கள் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 
புரோகிராம்களை டெவலப் செய்தவர் களுக்கு, ஆப்பிள் நிறுவனம் ஓராயிரம் கோடி டாலர் வழங்கியுள்ளது. ஒவ்வொரு புரோகிராமின் விற்பனைத் தொகையிலும், ஆப்பிள் 30 சதவீதப் பணத்தை எடுத்துக் கொண்டாலும், இதற்கென புரோகிராம் டெவலப் செய்வது லாபம் தரும் முயற்சியே என்று பல டெவலப்பர்கள் கூறி உள்ளனர். 
அமெரிக்க நாட்டில், இன்னும் ஐ போன் விற்பனையும் பயன்பாடுமே, முதல் இடத்தில் உள்ளன. இதற்கு ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கும் எண்ணற்ற புரோகிராம்களும் காரணமாகும்.

Jul 18, 2013


பிரான்சின் மூத்த குடிமகள் சாவடைந்தார்!
July 14, 2013, 8:03


14 மார்ச் 1901ம் ஆண்டு பிறந்த Suzanne Burrier, தனது 112வது வயதில் சாவடைந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த Montluçon (Allier) இலிருந்கும் முதியோர்  இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சாவடைந்துள்ளார். கடந்த மே மாதம் இவரிலும் நான்கு மாதங்கள் மூத்தவரான Irénise Moulonguet சாவடைந்ததை அடுத்து இவரே பிரான்சின் அதிக வயது கூடிய பெண்ணாக இருந்தார். இவரின் சாவிற்குப் பின்னர் 19ம் திகதி ஜுன் மாதம் 1901 ஆம் ஆண்டு பிறந்த Loire இல் வசிக்கும் Olympe Amaury எனபவர் இப்போது பிரான்சின் அதிக வயது கூடிய பெண்ணாகின்றார். இவருக்கு அடுத்தவராக Guyane இல் வாழும் 1ம் திகதி ஒக்டோபர் மாதம் பிறந்த Eudoxie Baboul திகழ்கின்றார்.

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப் பிரான்ஸ் சந்திக்க உள்ளது.

தாக்கவரும் கடும் வெப்பம்!! எச்சரிக்கை!!! (அரச அறிவிப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன)
July 18, 2013, 11:13 pm|views: 1712

 எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப் பிரான்ஸ் சந்திக்க உள்ளது. பிரான்சின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (caniculaire) தாக்க உள்ளன. நிழலிலேயே 30° வெப்பமும் தென்பகுதியில் 35° யைத் தாண்டியும் ய வெப்பநிலையும் அமைய உள்ளது. இவ் வெப்பமானது எதிர்வரும் வாரம் முழுவதும் நீடிக்க உள்ளது என வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன. இந்த வெப்பத்தின் முடிவில் கடுமையான புயல் மழை ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது.





தென்கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வெப்பக்காற்று பிரான்ஸைக் கடப்பதாலேயேயும் பிரித்தானியாவின் தீவுகளில் இருந்து வரும் எதிர்ச்சூறாவளியினாலும் (anticyclone) இந்த வெப்நிலை உயர்வு ஏற்பட உள்ளது. குறைவான வெப்பநிலையாக 20° க்கு மேலேயும் அதிகூடிய வெப்பநிலையாக 33° வெப்பமும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த வெப்ப அலையைச் சமாளிக்க சில ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.



தாகத்திற்காகக் காத்திராமல் அடிக்கடி நீர் அருந்த வேண்டும்.


நாளின் நண்பகல் வேளைகளில் அதி கூடிய வெப்பம் இருக்குமாகையால் கூடிய அளவு வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்


வெளிர்மையான நிறங்கள் உள்ள மெல்லிய துணிகளினால் ஆன பருத்தி உடைகளை அணியவும். கறுப்பு நிறத்தைத் தவிர்க்கவும். கறுப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டது.


வீடுகளின் யன்னல்களின் வெளிப்புற அடைப்புகளைச்  (Volets - Shutters) சாத்திவிட்டு யன்னல்களைத் திறந்து விட்டுக் காற்றோட்டம் உள்ளவாறு பார்த்துக் கொள்ளவும். மின்விசிறிகளையும் பயன்படுத்தவும்.


அடிக்கடி குளிக்கவும். உடலைத் துவட்டாது விடவும்.


வயதானவர்களையும் குழந்தைகளையும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும்.


 

மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”




இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங் ள் கவலை காணாமல் போய்விடு ம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக்கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர் கள்.

கவலை நிவாரணி

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவ லை ஏற்படும் போது

அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்?


கம்ப்யூட்டரில் இரண்டு வகை உண்டு.


1. பிரபல நிறுவனங்கள் தயாரித்து விற்கும் கம்ப்யூட்டர்கள்..(Branded computers)
2. நாமாக கணினியின் பாகங்களை வாங்கி, அவற்றை ஒன்றிணைத்து கணினியாக மாற்றுவது. (Assemble Computer)

முன்னது பிராண்டட் கம்ப்யூட்டர் எனவும், பின்னது அசெம்பிள் கம்ப்யூட்டர் எனவும் அழைக்கிறோம்.
சரி.. இவை இரண்டனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? இரண்டும் ஒன்றா? இல்லை வெவ்வேறானவை? இந்த குழப்பங்கள் ஒரு சிலருக்கு இருக்கக்கூடும்.

இரண்டும் செயல்படுவதில் ஒன்றுதான். ஆனால் கணினி தயாரிப்பு முறைகளில், அதில் இடம்பெற்றிருக்க பாகங்களின் தரங்களில் வேறுபடுகிறது.

அவற்றைப் பற்றி முழுமையாகப் பார்ப்போம். முதலில் பிராண்டட் கம்ப்யூட்டர்களை (Branded Computers)எடுத்துக்கொள்வோம். இது மிகப் பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, ஒரு சில சோதனைகளுக்குப்

ஹார்ட் டிஸ்க்குகலில் இடம் பிடிக்கும் கோப்புகளை அழிக்க

ஹார்ட் டிஸ்க்குகலில் இடம் பிடிக்கும் கோப்புகளை அழிக்க



இப்பொழுதெல்லாம் கணினிகளுக்கான ஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு “low disk space” என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.நம் டிஸ்க்கில் பைல்களை உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து காப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக காப்பி செய்யப்பட்டவற்றை நீக்குவதும், தேவையற்றவற்றை அழிப்பதும் சற்று சிரமமான, நேரம் எடுக்கும் வேலையாகவே உள்ளது.

                           

எனவே தான் ஹார்ட் டிஸ்க்கில் சேரும் பைல்களின் எண்ணிக்கை குறித்தோ, அது எடுத்துக் கொள்ளும் இடம் குறித்தோ கவலை கொள்வது இல்லை. மேலே சுட்டிக் காட்டியது போல செய்தி வரும்போதுதான், கவலை கொண்டு அதற்கான வழிகளைத் தேடுகிறோம்.குவிந்திருக்கும் பைல்களில் எது அதிக

மாதுளையின் மருத்துவ குணங்கள்


 

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.


மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.


***


மாதுளையின் சத்துக்கள்:




1. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
*
2. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்



நெல்லி (Emblica offinalis அல்லது Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது

 
சித்த மருத்துவத்தில் நெல்லி மரத்தின் அனைத்து ( இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை ) பாகமும் பயன் உள்ளது.
*
 
இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்.
*
அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர்.
*
இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.
*
 
நெல்லியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...