Jul 27, 2013

முத்துக்கள் பத்து! --- கணிணிக்குறிப்புக்கள்,







விண்வெளியில் ராக்கெட் செலுத்துவது முதல், சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது வரை அனைத்து பணிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது கம்ப்யூட்டர்! அதன் முன்பாக அமர்ந்துவிட்டால் மட்டும் போதாது... முறையாகக் கையாள்வது பற்றிய பொது அறிவும் அவசியம்! கம்ப்யூட்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது, நல்ல முறையில் பராமரிப்பது தொடர்பான சில ஆலோசனைகள், 'முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.





முறையான ஷட் டவுன்... முக்கியம்!

பலரும் கம்ப்யூட்டரை அணைப்பதை மின்விளக்கை அணைப்பதைப்போலச் செய்வார்கள். பலவிதமான பிரச்னைகளுக்கும் இது முக்கியமான காரணம் ஆகிவிடும். ஒவ்வொரு விண்டோவையும் முறையாக நிறுத்திவிட்டுப் பின்னரே கம்ப்யூட்டரின் திரையையும், சி.பி.யூ-வையும் அணைக்க வேண்டும். இல்லை என்றால்... கம்ப்யூட்டரின் மூளை குழம்பி, அடுத்த முறை ஆன் செய்யும்போது பலவிதமான பிரச்னைகளையும் கொடுக்கும்.

பாக்கெட் மணி!

'செபி’யின் இணையதளத்தில் (http://investor.sebi.gov.in/fevernacular.html) 'பணம்’ என்ற

Jul 26, 2013

உங்களுடைய கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?

உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரி ல் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். விண்டோஸ் ஆப்பரேட்டி ங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொ ண்டுள்ள வர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ் டம் பைல்களி ல் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்துபவர்களின் அமை ப்பை பாதிக்கலாம். இந்த இருவகை அக்கவுண்ட்கள், உங்கள் கம்ப்யூட்டரை ப் பாதுகாக்கத்தான் ஏற்படுத்தப்பட்டுள் ளது. இதனால் தான், மற்றவர்கள்,

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத் திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப் படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கி றது. அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன் னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது. இதனை ஆங்கிலத்தில் Uniqueness எனப்படுகிறது. இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முக வரியை இணைய சேவை வழங்கும் நிறு வனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிக மான

Jul 25, 2013

ஆண்ட்ராய்ட் விட்ஜெட்கள்


கைகளில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனங்களில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது முதல் இடத்தில் உள்ளது. 

பல பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட இந்த சிஸ்டத்தில், முக்கியமான வசதியைத் தருவது அவற்றின் விட்ஜெட் (widget) களே. ஆனால், பயன்படுத்துபவர்கள், இந்த விட்ஜெட் குறித்து அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. 

நீங்கள் ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனம் எதனையும் தற்போது பயன்படுத்தவில்லை என்றாலும், இது குறித்து அறிந்திருப்பது நல்லதே. ஏனென்றால், என்றாவது ஒரு நாள், கூடிய விரைவிலேயே ஆண்ட்ராய்ட் கொண்டுள்ள சாதனம் ஒன்றினை உங்களுக்கென நீங்கள் இயக்கும் நாள் வரலாம்.

ஆண்ட்ராய்ட் திரையில், புரோகிராம் ஐகான்களாகக் காட்டப்படுகின்றவையே விட்ஜெட் ஆகும். ஆனால், பெர்சனல் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஐகான்களுக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. 
விட்ஜெட் கொண்டுள்ள புரோகிராம், அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொண்டு, விட்ஜெட்டில் அதனைக் காட்டும். எடுத்துக் காட்டாக, காலண்டர் கொண்டுள்ள ஒரு விட்ஜெட், வரப்போதும் நிகழ்வுகள் குறித்து உங்களுக்குக் காட்டும். 
அப்போதைய நேரத்தைக் காட்டும் கடிகாரமும் ஒரு விட்ஜெட் தான். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கட்டமைப்பிலேயே இடம் பெற்றவையாக சில விட்ஜெட்டுகள் உள்ளன. சில கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட புரோகிராம்களின்

தகவல் தொழில் நுட்ப சொற்களும் விளக்கமும்





சில தகவல் தொழில் நுட்ப சொற்கள், நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும் சொற்களாக இருந்தாலும், அவை குறிக்கும் செயல்பாடு அல்லது கருத்து என்னவெனச் சரியாக நம்மால் வெளிப்படுத்த முடியாது. 

ஏனெனில்,அவற்றின் இயக்க சூழல் தன்மையும், சாதனங்களின் செயல்பாடுகளுமே அவற்றின் தன்மையை முழுமையாக விளக்க முடியும். அப்படிப்பட்ட சில தொழில் நுட்ப சொற்கள் இங்கு தரப்பட்டுள்ளன. 


Failover
பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
MMC Multimedia Card: 
பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.
Back up Domain Controller: 
விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. 
அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும். 
RAID Redundant Array of Independent Disks: 
ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
Downtime: 
ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.
Backup Rotation: 
பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது. 
(DES) Data Encryption Standard: 
மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.
Cryptography: 
தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.
Blowfish Encryption
ஒரு சீரான என்கிரிப்ஷன் வழிமுறை. இதனைத் தற்போது பயன்படுத்தும் (DES) என்கிரிப்ஷன் முறைக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். அதைக் காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்டதாக உள்ளது. என்கிரிப்ட் செய்ததைப் பெறுவதற்கான கீயும் மிகவும் ரகசியத் தன்மை உள்ளதாக அமைகிறது. 
Mirror Site: 
ஒரு வெப் சைட் அல்லது எப்.டி.பி. சைட்டின் டூப்ளிகேட், அதாவது நகல், சைட். இதனால் முதன்மையான வெப்சைட் டேட்டா வரவால் தடுமாறுகையில் இந்த மிர்ரர் சைட் உதவிக்கு வரும். இலவச புரோகிராம் டவுண்லோட்களை வழங்கும் வெப்சைட்டுகள், மாணவர் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் வெப்சைட்டுகள் தங்களின் தளங்களில் ஹிட் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற மிர்ரர் சைட்களைப் பயன்படுத்துகின்றனர்.
Event Handler: 
ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்திவிடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறதல்லவா! அந்த அழுத்தும் செயலின் பின்னணியே Event Handler என அழைக்கப்படுகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...