Jan 13, 2014


Makita RT0700C router trimmer

Bosch GCM12GDL Glide mitre saw

Bosch GCM12GDL Glide mitre saw

Makita How it Works. DXT Mitre Saws. LS1216L

Rotary Hammer Drill Demonstration | CS Unitec






Jan 9, 2014

ஏகாதசி அன்று 2 முறை சாப்பிடலாமா?

ஏகாதசி அன்று 2 முறை சாப்பிடலாமா?
ஜனவரி 09,2014
Temple images
ஏகாதசியன்று நாள் முழுவதும் பட்டினி இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், ஏகாதசி குறித்த ஸ்லோகம் ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம் என குறிப்பிடுகிறது. இதற்கு, சகல ஜனங்களும் ஏகாதசியன்று இருமுறை சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. இந்த ஸ்லோகத்தில் போஜன என்பதை போ, ஜன என இரண்டாகப் பிரித்து பொருள் காண வேண்டும். இதற்கு ஹே! ஜனங்களே! என்று அர்த்தம். இந்த ஸ்லோகத்தின் தொடர்ச்சியாக, ஏகாதசியில் செய்ய வேண்டிய செயல் பற்றிய விளக்கம் உள்ளது. அதாவது,சுத்த உபவாஸ; ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத: என்பதே அது. ஆக ஹே! ஜனங்களே! ஏகாதசியன்று முழுமையாக விரதம் இருக்க வேண்டும். ஹரி கதை கேட்க

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?
ஜனவரி 09,2014



Temple images
வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி  என்பர்.

ஏகாதசியன்று செய்யக்கூடாதது: ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?

ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?
ஜனவரி 09,2014


+
Temple images
ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொள்ள வேண்டும். இதனை, அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

ஏகாதசி வளர்ந்த கதை: மார்கழி வளர்பிறை ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் வேதங்களை ஜெபித்து, ஸ்ரீரங்கத்திலுள்ள நம்பெருமாளை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், வேதத்தோடு நம்மாழ்வாரின் பாசுரங்களையும் பாடும் நடைமுறையை திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினார். நாதமுனிகள், மற்ற ஆழ்வார்களின் பாடல்களையும் சேர்த்துப் பாடும் வழக்கத்தை உண்டாக்கினார். அதற்காக, ஏகாதசிக்கு 10நாட்களுக்கு முன்பே இவ்விழா தொடங்கப்பட்டது. பாட்டு பாடுவதோடு, அபிநயமாக நடித்துக் காட்டி வியாக்யானம் (பாடலுக்கான விளக்கம்) சொல்லும் முறையை பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் ஏற்படுத்தினார். ஆடியபடியே பாடுவதற்கு அரையர் சேவை என்று பெயர். இந்த நடைமுறையே ஸ்ரீரங்கத்தில் பின்பற்றப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்

வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?
ஜனவரி 09,2014



Temple images
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று  பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசிஇலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு. சாப்பாட்டை முடித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்குள் சாப்பிடுவது மிகவும் உசிதம். அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க  வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெறுவர்.

ஏகாதசிக்குரிய தலம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஏகாதசி விரதத்திற்கு பெயர் பெற்றது.  இத்தலம் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் இதுவும் ஒன்று.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...