Dec 28, 2021

இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

 


இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?



இரத்தத்தில் சேரும் அதிக கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களை குறுகலாக்கி ("அதீரோஸ்குளோரோசிஸ்'), அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இ ரத்தத்தில் கொழுப்பு சத்து சேருவதற்கும் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள், கீழ்க்கண்டவாறு உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்:-
  • எண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி-பால் கோவா, முந்திரி, தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.
  • வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.
  • கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்" போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.
  • பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.
  • ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.
  • தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
    தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது.
    தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.
  • எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
  • அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது.
  • முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

    ‘சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாயந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (Unssaturated Fat) முட்டையில் உள்ளன’ என்கிறார் டாக்டர் டொனால்ட் மெக்மைரா.
  • இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாம், ஆனால் அதை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்டு சாப்பிடலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே .
  • மாமிசத்திலுள்ள தோல்கள் மற்றும் கொழுப்பை, சமைப்பதற்கு முன்னர் நீக்கிவிட வேண்டும்
  • மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம். கொழுத்த மீன் சாப்பிடுவது கொலெஸ்ட்ரால், ரத்த அழுத்தம், ரத்த உறைவதை பெருமளவு குறைத்து இதயத்தைப் பாது காக்கிறது. குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும்.
  •  சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் .சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
  •  மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.
  • கொட்டை வகைகள்: முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும். 
  • பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவில் அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருக்கிறது. இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது
  • பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.
  • ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்
  • எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.
  • கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.
  • டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.
  • பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.
  • வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.
  • உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.
  • இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.
  • ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.
  • வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது -நல்லது
உணவு வகையில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு

* மூளை - 2000 (mg /100gm)
* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)
* சிறுநீரகம் (Kidney)-375 (mg /100gm)
* கல்லீரல் (Liver)-300 (mg /100gm)
* வெண்ணெய் -250 (mg /100gm)
* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)
* லோப்ஸ்டெர்-200 (mg /100gm)
* இறால் (Shrimp)-170 (mg /100gm)
* இருதயம்-150 (mg /100gm)
* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)
* இளம் ஆட்டிறைச்சி (Lamb) -70 (mg /100gm)
* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)
* கோழியிறைச்சி-62 (mg /100gm)
* பாலாடைக் கட்டி (chedder cheese) -100 (mg /100gm)
* குழைவான பாலாடைக்கட்டி (cheese Spread) -70 (mg /100gm)
* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)
* Margarine (2/3 விலங்கினக் கொழுப்பு, 1/3 தாவர கொழுப்பு)-65 (mg /100gm)
* மயோனஸ் (1 மேசைக் கரண்டி)-10 (mg /100gm)
* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)
* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)
* நிறைக் கொழுப்புப் பால்பொடி (1 குவளை)-85 (mg /100gm)
* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)
* பிரெட்-1 (mg /100gm)
* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)
* சாக்லேட் பால்-90 (mg /100gm)

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்

 

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்

ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

hardlywork-app-use-facebook-in-excel-sheet-1

நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக் பயன்படுத்தவும் மற்றவர்களுக்குப் பார்த்தாலும் கண்டறிய முடியாத வசதியை Hardlywork.in எனும் தளம் தருகிறது. இது தோற்றத்தில் ஒரு எக்சல் ஷீட்டில் (MS-Excel Sheet) வேலை செய்வது போன்று காட்சியளிக்கும். ஆனால் இதில் உங்கள் Facebook NewsFeed, Wall, Messages, Likes, Comments என அனைத்தையும் எக்சல் ஷீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

hardlywork-app-use-facebook-in-excel-sheet-3

முதலில் Hardlywork.in தளத்திற்குச் சென்று ” Gimme dem spreadsheets” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் Facebook ஐடி / பாஸ்வேர்டு கொடுத்து Login செய்யவும்.

Also Read:  ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைக்க
 
அடுத்து உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை இந்த தளம் பயன்படுத்த அனுமதி கேட்கும். Okay பட்டனைக் கிளிக் செய்யுங்கள். இப்போது எக்சல் ஷீட் போன்று தளத்தில் தோன்றும். இதனைப் பயன்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.

hardlywork-app-use-facebook-in-excel-sheet-2

1. மூன்று வகையான Themes உள்ளன. (Mac,Excel 2003 and Excel 2007)
2. நண்பர்களைத் தேட Excel Functions bar இல் அடித்துத் தேடலாம்.
3. உங்களுக்கு வரும் Notification / செய்திகளைக் கிளிக் செய்து பார்க்கலாம்.
4. Load More பட்டன் மூலம் பழைய செய்திகளைப் பார்க்கலாம்.
5. Hover வசதி - செய்திகளுக்கு அருகில் மவுசை வைத்தால் அதிலிருக்கும் படங்கள் / வீடியோக்களை Preview பார்க்கலாம். Likes and Comments எண்களின் அருகே மவுசைக் கொண்டு சென்றால் யாரெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
6. இது தான் முக்கியமான செயல். யாராவது தீடிரென்று வந்து விட்டால் Space Bar ஐத்தட்டுங்கள். சாதாரண எண்கள், கணக்குகள் நிறைந்த எக்சல் பைலாக தளம் மாறிவிடும்.
7. இந்தத் தளத்திலிருந்து Logout செய்யப் பயன்படும். 

Dec 16, 2021

"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்

"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள் 3:55 PM facebook, facebook security, facebook security settings, facebook settings, how to protect a facebook account, how to secure a facebook account, பேஸ்புக் சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை
தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன. 1. பேஸ்புக் பிளேசஸ் >( Facebook Places )< இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settingsஉள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் ( Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize ) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள். 3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா? : பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும். 4. அப்ளிகேஷன்களுக்குத் தடா: பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications< என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும். 5. அணுகுவதற்குத் தடை: உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites சென்று Edit your settings- ய் கிளிக் செய்யவும். இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம். 6.இறுதி நடவடிக்கை: பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே. பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது. ------------------- நன்றி -------------------

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...