Apr 29, 2012

நீரிழிவு நோய் – 2 டென்மார்க்கில் இளையோரையும் தாக்குகிறது !

நீரிழிவு நோய் – 2 என்பது முன்னர் வயோதிபர்களுக்கான சல வருத்தம் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. இப்போது டென்மார்க்கில் வயது குறைந்த இளையோருக்கும் நீரிழிவு நோய் – 2 வருவதாக புதிய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வானது ஆச்சரியப்படத்தக்க வகையில் உயர்வு கண்டிருப்பதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. பத்தாண்டுகளுக்கு முன்னவர் 40 வயதுடையோரில் வருடாந்தம் 1713 பேர் சலரோகம் – 2 ஆல் பாதிக்கப்பட்டனர். இன்றோ இத்தொகை 2945 ஆக உயர்வு கண்டிருக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு, உடலின் பல பாகங்களில் உண்டாகும் இரத்தத் தடை, பார்வைக்குறைவு, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பல்வேறு உயிராபத்து விளைவிக்கும் வியாதிகளை இளம் வயதிலேயே மக்கள் எதிர் கொள்ள நேரிடுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு உணவுப் பழக்கம்
, பரம்பரை போன்ற காரணங்கள் பின்னணி வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது டென்மார்க்கில் 2.20.000 பேர் நீரிழிவு-2 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டென்மார்க்கில் தற்போதய புள்ளி விபரங்களின்படி நீரிழிவு – 2 நோயின் தாக்கமுடையவர்கள் வயது 50 – 59 இடையில். 58 வீதம், 60 – 69 இடையில். 98 வீதம், 70 – 79 இடையில். 38 வீதம், 80 வயதுக்கு மேல், 42 வீதம். பீ.எம்.ஐ என்னும் அளவு முறையில் 30 மேற்படாமல் பார்ப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது இந்த ஆய்வு.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...