Apr 21, 2012

2013ல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப இந்தியா திட்டம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை எதிர்வருகிற 2013 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

இத்திட்டத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் அரசின் அனுமதி
வேண்டி, இத்திட்ட அறிக்கையை இந்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோவிலிருந்து தகவல் வெளிவந்துள்ளன.

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் என்கிற பி.எஸ்.எல்.வி ரொக்கெட் மூலம் செலுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் சுமார் 25 கிலோ அளவிற்கான ஆராய்ச்சிப் பொருட்களை விண்ணில் சுமந்து செல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? கிரகத்தின் வானிலை, அமைப்பு, உருவாக்கம், உருமாற்றம் மற்றும் இக்கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து இவ்விண்கலம் ஆராயும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...