Apr 19, 2012

Add caption
"அட்சய திருதியை + புகைப்படம்" அட்சயத் திருதியை இரண்டு நாட்களாக மாற்றிவிட்டதாக வந்த செய்தியை படித்து சிரித்தாலும், இது காலப்போக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வந்த "சித்திரை தமிழ் புத்தாண்டை" அரசியல் ஆதாயத்துக்காக "தை" முதல் நாள் மாற்றியது போல, வியாபார உள் நோக்கோடு நம் வியாபாரிகளாய் மாற்றிக்கொண்டது என்பதை வரும் தலைமுறைகள் மறந்து தங்கள் சேமிப்பை கரைக்க போகிறார்கள் என்ற வேதனையும் நெருடுகிறது. யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை? என ஒரு சந்தேகமும் கூடவே வருகிறது? "அட்சயத் திருதியை" என்று இந்துமதம் சொல்வது என்ன? என்பதை புரிந்து கொள்ள எடுத்த முயற்சியே இந்த பதிவு. பூரியசஸ் மன்னரின்
கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை. அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் "அட்சய பாத்திரம்" போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை "அட்சய திரிதியை" என்று சொல்லும் வழக்கம் வந்தது. இந்து மதத்தை பொறுத்தவரை "வளருதல் அல்லது என்றுமே குறையாதது" என்னும் பொருளே "அட்சயம்", பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான். கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான். ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது. அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை. உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும். அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை. அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை. இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த "தங்கம் வாங்க வேண்டும்" என்பது. உண்மையில் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்
தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் "கல்"உப்பு போன்றவைதான் (நன்றி தினமலர் ஆன்மீக வினா விடை). நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் "கல்"உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசையம்). இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம். கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது. அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது. அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து. ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை. அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகு

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...