Apr 30, 2012

கதிர்ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்


ஆண்களுக்கும் எலும்புத்
தேய்மான நோய் ஏற்படுவது ஏன்?
 தவிடாய் நின்று போன பின்னர் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பது நின்று போய்விடுவதால் ஞநபஉஞடஞதஞநஐந எனும் எலும்புகள் வலுவிழந்து போகும் உபாதை ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆண்களிலும் பல இளைஞர்களுக்கும் இந்த உபாதை ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. சாதாரணமாகத் தடுக்கி விழுந்தால் கூட கை, கால், எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும் இந்த உபாதையைப் பற்றி ஆயுர்வேத விஞ்ஞானம் சொல்லும் அபிப்பிராயம் என்ன?
 எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.
 "தத்ராஸ்தினிஸ்திதோ வாயு:' என்கிறது ஆயுர்வேதம். வாயு எலும்பில் இருப்பதாக அதற்கு அர்த்தம்.
வயோதிகத்தில் வாயுவின் குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, கரடு, சூட்சமம் (நுண்ணிய இடங்களிலும் பிரவேசிக்கும் தன்மை), சலம் (நிலையற்றது) போன்றவை ஆதிக்கம் செய்யத் தொடங்குவதால், அதற்கு ஆதாரமாக நிற்கக் கூடிய எலும்புகளில் இவற்றின் பிரவேசம் வரவேற்கத்தக்கதல்ல. காரணம் எலும்புகள் வலுவாக நிற்பதற்கு இந்த குணங்களுக்கு நேர் எதிரான எண்ணெய்ப் பசை, குரு (கனமானது), சூட்டினால் பக்குவமாகி இறுகிய நிலை, கடினம், மூடிய நிலை, அசைவற்றதன்மை போன்றவை தேவையாக உள்ளன. இப்படி எதிரும் புதிருமாக வாயுவும்- எலும்புகளும் இருப்பதால், ஒன்றில் ஏற்படும் வளர்ச்சி, மற்றதினுடைய அழிவுகளுக்குக் காரணமாகிவிடுகிறது. ஆகவே வாயுவின் இயற்கையான வளர்ச்சி வயோதிகத்தில் ஏற்படுவதைத் தடுப்பதன் மூலம், எலும்புகளின் வலுவற்ற தன்மை ஏற்படாமல் நம்மால் பாதுகாக்க முடியும்.
 வாயுவை அடக்கி வைக்கும் சில சிறந்த உபாயங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது.

 •ஸ்நேஹ - உடல் உட்புற வெளிப்புற நெய்ப்பு. உட்புற நெய்ப்பைப் பாதுகாக்க, நெய்யை உப்புடன் சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடுதல் நல்லது. நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக உடலெங்கும் பூசி, வெந்நீரில் குளிப்பது வெளிப்புற நெய்ப்பிற்கான சிறந்த முறையாகும்.

 •ஸ்வேத - உடலில் எண்ணெய் தேய்த்த பின், சிறிது நேரம் காலையில் உடலில் வெயில் படும்படி அமருதல். வியர்வை உண்டாகும். எலும்புகள் வலுவடையும். வாயு மட்டுப்படும். உடல் உட்புறங்களில் தேங்கியுள்ள அழுக்குகள் நெகிழ்ந்து குடலுக்குள் வந்துவிடும்.

 •சம்சோதனம் மிருது - நெகிழ்ந்து குடலுக்குள் வந்துள்ள அழுக்குகளை விளக்கெண்ணெய், சிவதை வேர் போன்ற மிருதுவான மலமிளக்கிகளால் வெளியேற்றுதல்.

 •ஸ்வாத்வம்ல, லவண, உஷ்ணானி போஜ்யானி - உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை, சூடான வீர்யம் கொண்டவற்றை சற்றுத் தூக்கலாகச் சேர்த்துக் கொள்ளுதல்.

 •அப்யங்க மர்தனம் - எண்ணெய் தேய்த்துக் கொண்ட பின், உடலை இதமாகப் பிடித்துவிடுதல்.
 மேற்குறிப்பிட்ட முறைகள் அனைத்தும் நம்மால் எளிதாக வீட்டில் செய்து கொள்ளக் கூடியவை. எண்ணெய் மற்றும் கஷாயங்களால் செய்யப்படும் பஸ்தி எனும் எனிமா சிகிச்சை முறை, நவரக்கிழி சிகிச்சை முறை, ஆயுர்வேத மருத்துவமனைகளில் தங்கி எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த வாயு சமன சிகிச்சை முறையாகும்.
 வாயுவை வளரச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, பருப்பு வகைகளாகிய துவரை, பயறு, கடலை, கறிகாய்களில் வாழைக்காய், உருளைக் கிழங்கு, கொத்தவரங்காய், சேப்பங்கிழங்கு, சேனைக் கிழங்கு, காராமணி, மொச்சைக் கொட்டை, வேர்க்கடலை போன்றவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது. பசியைத் தூண்டுவதும், உடலுக்குப் புஷ்டியைத் தருவதுமாகிய புஷ்டியான நெய்ப்புப் பொருட்களைச் சாப்பிடுவது, வெதுவெதுப்பான வெந்நீரையே பருகுவது போன்றவை குடலில் வாயு தங்காமல் எளிதாக வெளியேற்றக் கூடியவை. அதனால் இவற்றை நாம் உணவாக ஏற்பது நலம்.
 ஆயுர்வேத மருந்துகள் அஸ்வகந்தா சூரணம், சிருங்க பஸ்மம், அப்ரகபஸ்மம், பிரவாள பஸ்மம், விதார்யாதி கிருதம், தசமூலாரஸôயனம், இந்துகாந்தம்கிருதம் போன்ற உள் மருந்துகள் சாப்பிட உகந்தவை. மஹாமாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி குழம்பு, வாதமர்த்தனம் குழம்பு, தான் வந்திரம் தைலம், மஹாநாராயண தைலம், குக்குட மாம்ஸ தைலம் போன்ற எண்ணெய்த் தேய்ப்பு மருந்துகள் வெளிப்புறம் உபயோகிக்கச் சிறந்தவை. இவை மூலம் எலும்பு அடர்த்திக் குறைபாடு இல்லாமல், வாயுவையும் கட்டுப்படுத்திக் கொண்டு ஞநபஉஞடஞதஞநஐந உபாதையைப் பெருமளவு தடுத்துக் கொள்ள முடியும்.
 (தொடரும்)


 பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்,
 ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதிஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை-600 123 (பூந்தமல்லி அருகே)

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...