Apr 18, 2012

செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர்

மனிதனுடைய மூளைக்கு அடங்கிய கம்ப்யூட்டர் இயங்கினாலும் மனித மூளையைவிடப் பன்மடங்கு ஆற்றலுடன் கம்ப்யூட்டர் செயல்படுகிறது. மனித மூளையை விடதட தீவிரமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் கள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. மனித மூளை செயல்படுவதைத் துல்லியமாக விளக்க முடியாது. கம்ப்யூட்டர் செயல்படுவதை விளக்க முடியும்.மூளையில் பதிவாகியிருக்கும் எல்லா தகவல்களையும் பயன்படுத்த முடியாது.பல தகவல் அடி மனதில் பதிவாகி இருக்கும்.அவற்றை எளிதில் மீட்டுக் கொண்டு வர முடியாது. கம்ப்யூட்டர் நினைவகத்தில் பதிவாகியுள்ள எந்தத் தகவலையும் எந்த நேரத்திலும் மீட்டுக் கொண்டு வரமுடியும்.அது முழுமையானதாகவும் இருக்கும்.இந்த வகையில் மனித மூளையை விடக் கம்ப்யூட்டரே சிறந்தது என்று கூறலாம். மனித மூளை தன் நினைவில் உள்ள ஒன்றை சற்று மாறுபட்டாலும் கூட இனங் கண்டு கொள்ளும். கம்ப்யூட்டரினால் அது முடியாது.மூளை செயல்படுவதற்குத் தேவையான ஆற்றல் முழுவதும் மூளையிலேயே உற்பத்தி செய்து கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை வெளியிலிருந்து நாம் கம்ப்யூட்டருக்குக் கொடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டரில் பிழை மிகச் சிறிய அளவில் ஏற்பட்டு விட்டாலும் அவை வெளியிடும் தகவல்கள் முடிவுகள் அர்த்தமில்லாதவையாக இருக்கும். ஆனால் மனித மூளையில் சிறு சிறு தவறுகளினால் பெரும் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை. கம்ப்யூட்டர் தானாகச் சிந்தித்து ஒரு சிக்கலுக்கு முடிவெடுக்கும் திறன் அற்றதாக இருக்கின்றது.ஆனால் மனிதனின் அன்றாட செயற்பாட்டில் சூழ்நிலை பணியின் தன்மை முதலியவற்றிற்கேற்ப சிந்தித்து செயற்படுதல் முக்கியமாகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பல இலட்சம் கட்டளைகளை ஒரு வினாடியில் செயற்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டரின் செயல் வேகமோ பல இலட்சம் செய்திகளைப் பதிவு செய்யும் நினைவக வசதியோ உதவியாக இருப்பதில்லை. மனித மூளையைப் போன்று சிந்தித்துச் செயலாற்றும் நுண்ணறிவு கம்ப்யூட்டருக்குத் தேவைப்படுகிறது. கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிற இந்த மனித நுண்ணறிவினை நாம் செயற்கை நுண்ணறிவு என்கிறோம். செயற்கை நுண்ணறிவுத் திறனின் மூலம் உயிரற்ற கருவியாகிய கம்ப்யூட்டரை மனிதனைப் போன்று சிந்தித்துச் செயற்படுத்துவதற்கேற்ப நுண்ணறிவு வாய்ந்த கருவியாக வடிவமைக்க முடியும். இவ்வகையான கணிப்பொறிகள் மனிதனின் ஜம்புலன்களின் செயல்திறான பார்த்தல் கேட்டல் தொடு உணர்ச்சி பேசுதல் முதலிய அனைத்தையும் பெற்று விளங்கும். இயந்திர மனிதர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவினைக் கொடுத்து மனிதர்களைப் போலவே படங்களையும் செய்திகளையும் காட்சிகளையும் தனது நினைவகத்தில் வைத்துகொள்ளவும் செய்யலாம். இன்னும் சில ஆண்டுகளில் மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு வாய்ந்த கணணிகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையான கணணிகள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது கற்பனைக்கெட்டாத பல கடினமான பணிகளையும் மனித முயற்சியால் இதுவரை முற்றிலும் முடியாமல் போன பல ஆராச்சிகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...