May 30, 2012

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்





உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே 11ம் திகதி தொடங்கியது.
12 சுற்று ஆட்டங்கள் கொண்ட இப்போட்டியில் இந்திய செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும், இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ்
கெல்பாண்டும் விளையாடினர். இப்போட்டியில் நடைபெற்ற முதல் ஆறு சுற்றுப் போட்டிகளும் சமனில் முடிவடைந்தன.
7வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். எட்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட ஆனந்த், கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து நடைபெற்ற 9, 10, 11, 12 வது சுற்று ஆட்டங்கள் சமன் ஆகின. இதனையடுத்து இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இந்த கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இன்று டை பிரேக்கிங் ஆட்டம் நடத்தப்பட்டது.
இந்த சுற்றின் ரேபிட் முறை ஆட்டங்களில் 2.5 - 1.5 என்ற கணக்கில் கெல்பாண்டை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி நடப்புச் சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த 2000, 2007, 2008 மற்றும் 2010 என நான்கு முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...