May 2, 2012

தினமும் 9 மணிநேரம் தூங்கினால் உடல் எடை குறையும்

பலர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டு கடுமையாக போராடி வருகின்றனர்.

இதனால் இரத்த அழுத்தம், சர்க்கரை உட்பட பல்வேறு நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

இதனைத் தடுப்பதற்காக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. உடல் குண்டாவதை தடுக்க உணவு கட்டுப்பாட்டு முறையை கையாள வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடல் எடையை அதிகரிக்காமல் குறைக்க “அயர்ந்த தூக்கமே நல்ல மருந்து”
என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் நதானியல் வாட்சன் தலைமையிலான குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், உடல் குண்டாவதற்கு மரபணு கோளாறே காரணம் என தெரியவந்தது. அவற்றின் நடவடிக்கைகளை செயலிழக்க செய்ய இரவில் தினமும் 9 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்க வேண்டும். குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...