May 6, 2012



சொர்க்கமும் நரகமும் எங்கே இருக்குன்னு நாம தேடிகிட்டு இருக்க வேண்டாம் ! நம்ம கிட்ட உள்ள நல்ல பண்பும் தீய பண்பும் தான் இவை .நம்மளோட எண்ணங்கள் தான் இதை தீர்மானிக்குது ? ஐய காலங்கார்த்தாலே என்னடா இவன் தத்துவத்த கக்காறனு
கடுப்படிக்காதீங்க ! ஒரு நல்ல விழயம் தானே கேட்டு வையுங்க பின்னாடி இது உதவலாம் ?

சரி இந்த எண்ணங்களை கட்டுப்படுத்த எதாவது வழி இருக்காடான்னு நீங்க கேட்கறதுக்கு முன்னாடியே பதிலை சொல்லிடறேன். இது என் பதில் இல்லேங்க எங்கோ எப்பவோ படிச்சது (பின்ன அந்த அளவுக்கு அறிவு இருந்தா நான் ஏன் இங்கே இருக்கேன்? ) முதல்ல ஒரு சாட்சியா நின்னு நம்மக்குள்ள எண்ணங்கள் தோன்றி மறைவதை கவனிக்கணும் அந்த எண்ணங்களில் நாம ஒட்டமா அதை தனியே நின்று பார்பதற்கு பழகிகுனும் !

இரண்டாவது மனதை விழிப்பற்ற புத்தி அல்லது விழிபுருவதை உணரும்போது ?விழிப்புற்ற புத்தியில் ஒடுக்குவது என்னவென்பது புரியும் !

பேச்சை குறைத்து அமைதியை கடைபிடிப்பதன் அமைதியின் உறைவிடமான இறைவனை அடையலாம்?!


எண்ணங்களை கடந்து மனம் ஒர் அமைதியான நிலைக்கு வர செயலற்ற நிலை உண்டாகும் (உடனே இதை சோம்பேறித்தனம் என்று நினைக்ககூடாது )இது தூக்கமும் கிடையாது சரியா சொன்ன புத்தி விழிபடைந்தா புலன்களும் மனமும் ஓய்வெடுக்கும். அப்ப செயலற்ற நிலை உருவாகிவிடும். அக விழிப்புணர்வு அதனால் உண்டாகி மனமும் புலனும் நமக்கே நமக்கு வசப்பட்ட பிறகுதான் இந்த நிலையைப்பற்றி நினைக்கவேண்டும் .

இந்த சத்வ(அமைதி) நிலையை நாம் அடைந்துவிட்டால் ஆன்மாவை அதான் ஒளியை நாம் அறிந்துகொள்ளலாம் ?


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...