May 12, 2012

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிகள்



பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு.

இதுதவிர அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால்
மன அழுத்தம் ஏற்படுகிறது.

மேலும் பணமும், இன்றைய ஆடம்பார வாழ்க்கைச் சூழலும் கூட மன அழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன. நமக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை விரட்ட எளிய பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் தெரபி: ஆழமாய் சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தத்தை விரட்ட முடியும் என்று பல்வேறு நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது.

இதனால் தசைகள் தளர்வடைகின்றன. மனமும் இயல்பு நிலையை அடைகின்றன. அடிவயிற்றில் கையை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். ஆழமாய் சுவாசிக்கவும் அப்பொழுது அடிவயிற்றின் அசைவுகளையும், மனமும், உடலும் லேசாக மாறுவதையும் உணரலாம்.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்பு. பற்களை இறுக கடித்தபடி காதுக்கு கீழ் சுட்டுவிரலால் அழுத்தவும். நீளமாக மூச்சை உள்ளிழுத்து அதனை வாய் வழியாக வெளியேற்றவும். மனஅழுத்தத்தின் சுவடுகள் உடலில் தங்காமல் வெளியேறிவிடும்.

இடைவெளி விடுங்கள்: மன அழுத்தம் அதிகமாகுதா? செய்யும் வேலையில் இருந்து சிறிதுநேரம் இடைவெளி விடுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மரங்கள் அடர்ந்த சோலையில் சில நிமிடங்கள் நடக்கலாம் அல்லது ஓய்வறைக்கு சென்று சிறிது தண்ணீர் அருந்தலாம். இதனால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கருத்து.

அழுத்தம் போக்கும் இசை: மன அழுத்தத்தை போக்குவதில் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. மன அழுத்தம் காரணமாக அதீத டென்சன் ஏற்படும் போது மனதிற்கு பிடித்த பாடலை ஹெட்போன் மூலம் கேட்கலாம்.

இதனால் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து போகும் மனம் அமைதியாகும். எனவே கையோடு ஹெட்போன் வைத்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பை குறைக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

கொஞ்சம் புன்னகை: இடியே விழுந்தாலும் பதற்றம் வேண்டாம். ஏனென்றால் பதற்றத்தோடு எழுபவன் தோல்வியோடு உட்காருவான் என்ற பழமொழியே உள்ளது.

எனவே எதனால் இது நேர்ந்தது என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தாலே பிரச்சினையின் தீர்வு பிடிபடும். அப்புறம் என்ன உங்களுக்கு டென்சன் ஏற்படுத்திய சம்பவத்தை கொஞ்சம் புன்னகையுடன் சமாளியுங்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...