Jun 8, 2012

விண்கல் ஒன்றின் மீது நாசாவின் வீரர்கள் இறங்குவர் : ஒபாமா!




சமீபத்தில் உலாவும் விஞ்ஞான ஹாட் செய்தி என்னவெனில்.ஒரு சில ஹாலிவுட் திரைப் படங்களில் காட்டியுள்ளது போல நிஜமாகவே விண்ணில் மிதக்கும் கல் ஒன்றின் மீது விண் வெளி வீரர்கள் இறங்கி ஆய்வுகள் செய்யவுள்ளனர். நாசாவின் இந்த செயற்திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இது இன்றிலிருந்து இன்னும் சுமார் 15 வருடங்களுக்குள்
சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்னர் விண் வெளியின் குறித்த ஒரு பாகத்தில் வீரர்கள் இறங்கி நடமாடி ஆய்வு செய்தது சந்திரனிலும் விண்ணிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலுமே ஆகும். பூமிக்கு வெளியே சந்திரனை விட மிக அதிக தூரத்தில் சூரியனை 80 000 Km/h வேகத்தில் சுற்றி வரும் இவ் விண்கல்லில் பத்திரமாக தரையிறங்குவதும் விண் வண்டிகளை இயக்குவதும் மிகப் பெரிய சவாலாகும். ஆயினும் சந்திரனில் தரையிறங்குவதை விட இவ் விண்கல்லுக்குச் செல்வது எரிபொருள் செலவு குறைவு.


சுமார் 4.6 பில்லியன் வயதுடைய இந்த விண்கல்லை ஆய்வு செய்வதன் மூலம் சூரியனும் கோள்களும் எவ்வாறு தோன்றின எனும் கேள்விக்கு பதிலைப் பெற முடியும் என்று கூறப்படுகின்றது. எனினும் வானியல் அறிஞர்களின் கூற்றுப் படி ஒபாமாவின் இந்த திட்டம் சந்திரனுக்கு செல்வதை விட கடினமான பயணம் என்றே கருதப் படுகின்றது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...