Jun 30, 2012

ஆமணக்கு மிகச் சிறந்த மருந்து

ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக் கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச் சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத் துகின்றார்கள்.
 
ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படு கின்றன.
குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு வித மான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள்.
சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறி து அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு க் கொடுத்து வர, சளித்தொல்லை குணமா கும்.
இதன் இலைகளை கீழாநெல்லி இலைகளு டன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று மு றை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோ ய் தீர்ந்துவிடும்.
சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால்
மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும்.
இதன் இலைகளைப் பொடியாய் அரை த்து, அதில் ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக் கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம் பெறும்.
ஆமணக்கு விதைகளைப் பாலில் அல் லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட் டுவலி, பின்தொடை, நரம்பு வலிக ளுக்கு மருந்தாகத் தரலாம்.
இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.
எனவே ஆமணக்கை பயன்படுத்தி நாமும் நோய்களை விரட்டு வோம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...