Jun 5, 2012


அளவுக்கதிகமான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிக்கும்!





உடற்பயிற்சி செய்தால் நல்லதென்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பதை உண்மையாக்குவதுபோல அளவுக்கதிகமான உடற்பயிற்சியும் உடலுக்கு தீமையைத் தருமென்கின்றனர் ஆய்வாளர்கள்.

நாளொன்றிற்கு ஒரு மணித்தியாலம் பயிற்சி செய்வதே இதயத்திற்குப் பாதுகாப்பானதாகும். அதற்கும் அதிகமென்றால் அது ஒருவருக்கு அவ்வளவு பயனைத் தராது.


இவ்வாறு தீவிரமான பயிற்சிகளையும் போட்டிகளையும் செய்வதானது ஒருவரது இதயத்திற்கு நீண்டகாலத்தின் பின்னர் பாதிப்பை ஏற்படுத்துமென்கின்றனர்.

நீண்ட மரதன் ஒட்டங்கள், சைக்கிளோட்டங்கள் என்பன இதயத்திலும் பெரிய நாடிகளிலும் அவற்றின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

உடற்பயிற்சியென்பது பொதுவாக சுகாதாரத்திற்கு நல்லதுதான் எனினும் இதனையே அதிகளவில் செய்யும்போது அது தீமை தரும் விடயமாகின்றது என்கின்றார் கன்சாஸ் நகர வைத்தியசாலை வைத்தியர் ஒருவர்.

கி.மு.490ம் ஆண்டில் ஓர் இளம் கிரேக்கச் செய்தியாளர் இரண்டு நாட்களில் 175 மைல்கள் ஓடிவந்தபின்னர் திடீரென இறந்தார்.

இவரது இறப்பே நீண்டதூர ஓட்டத்தில் பதியப்பட்ட முதலாவது இதயத் தாக்குதலாகும். பெரியவர்களாயின் வாரமொன்றிற்கு 5 தடவைகள் 30 நிமிடம் அல்லது அதற்கும் சற்று அதிக நேரப் பயிற்சிகளைச் செய்யலாமென்றும் சிறியவர்களாயின் 60 நிமிடங்கள் செய்யவேண்டுமென்றும் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் விளையாட்டு, நடை மற்றும் ஓட்டப்பயிற்சிகளைச் செய்யவேண்டுமென்கின்றது அரச வழிகாட்டி நூல்கள். நீண்டநேரப் பயிற்சிகளால் இதயத்துடிப்பு 120 ஆக உயர்கின்றதென்றும் இது கூறுகின்றது. பொதுவாக சிறிது தூர நடை அல்லது தோட்டம் செய்தல் போன்றனவே ஒருவருக்குப் போதுமான சுகாதாரச் செயற்பாடுகளாகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...