Aug 2, 2012

பெண்கள் தினமும் இரண்டு ஆப்பிள் சாப்பிடுங்கள்


பெண்கள் தினமும் இரண்டு ஆப்பிள் சாப்பிடுவது மாரடைப்பு போன்ற இதய வியாதிகளில் இருந்த அவர்களை காக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புனோரிடா மாகாண பல்கழைக்கழகம் இதுபற்றிய ஆய்வை நடத்தியது. ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி தமனியை பாதிப்பதால் தான் இதய கோளாறுகளும், மூளைக்கட்டிகளும் ஏற்படுகிறது.
 
மாதவிலக்கு பெண்களில் உடல்ரீதியான மாற்றங்களில் முக்கிய பங்கு வகிப்பது போலவே, மாதவிலக்கு விடைபெறும் மொனோபாஸ் காலமும் பெண்களின் உடலியல் மாற்றத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்தப்பருவத்தில் பெண்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள தெரிவிக்கின்றன.
 
இங்கிலாந்தில் மெனோபசை எட்டிய 45 சதவீதம் பெண்கள் இதய பாதிப்புகளால் இறந்ததுள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. தினமும் இரண்டு ஆப்பிள் சாப்பிடுவது இதய பிரச்சனையில் இருந்து தப்பிக்க சிறந்த வழி என்று புளோரிடா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உலர்ந்த ஆப்பிள் மற்றும் சாதாரண ஆப்பிள் பழங்கள் கொடுத்து ஓராண்டு காலம் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவு நல்ல விதமாக கட்டுப்படுத்தபடுவதால் மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகள் கட்டுப்படுவதாக ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
தினமும் இரண்டு ஆப்பிள் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் 6 மாத காலத்தில் கெட்ட கொழுப்பின் அளவு 24 சதவீதம் குறைந்ததாக அந்த ஆய்வு கூறுகிற

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...