Aug 11, 2012

கருத்தான கறிவேப்பிலை


படிமம்:Curry Trees.jpg...


கறிவேப்பிலைக் கன்று மாதிரி என்று குழந்தைகளைக் குறிப்பிடுவார்கள்..

வாழ்க்கைக்கு வசந்தமாய் சுவையும் மணமும் வழங்கி விழுதாய் குலத்திற்கு பெருமை சேர்ப்பதால் குலக்கொழுந்துகளை அப்படிக்குறிப்பிடுகிறார்களோ என எண்ணுவதுண்டு..

கறிவேப்பிலைக் கொத்தாக பயன்படுத்திக்கொண்டான் ’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

மனித உடலில் சீரண மண்டலத்தை தூண்டும் வேதிப்பொருளாக

செயல்படுகிறது.

இலையின் வடிநீர் வயிற்றுப்போக்கு, வாந்தி, சீதபேதிக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது. கசக்கிய இலைகளை தோல் வீக்கங்களுக்கு பற்றுப்போட பயன்படுத்தலாம்.
“வாயின் அருசி வயிற்றுளைச்சல் நீடுசுரம்
பாயுகின்ற பித்தமும் என் பண்ணுங்காண் – தூய
மறுவேறும் காந்தளம் கை மாதே, உலகில்
கருவேப் பிலையருந்திக் காண்.”

கறிவேப்பிலையால் அரோசிகம், வயிற்று எரிச்சல், பழைய நீண்ட சுரம், பித்தம் ஆகிய அனைத்தும் போகும். என்பதே பொருள்..

வேர்ப்பட்டை சிறுநீரகங்களின் வலி போக்கும் தன்மையுடையது. கனிச்சாறு எலுமிச்சை சாறுடன் கலந்து பூச்சிக் கடிகளை குணப்படுத்த மேல் பூச்சாகிறது.
பலமருத்துவ குணங்கள் மிக்க நம் சமையலில் பயன்படுத்தும் ஒரு சுவையூட்டி கறிவேப்பிலை (curry leaf)
இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.
File:Curry Tree flower3.JPG
வீட்டில் கறிவேப்பிலை செடி வளர்த்தால் அதன் இனிய மணமே ஜீரணத்தை த்ரும் என்பதை உணரலாம்..

ஆஸ்திரேலியாவில் பூங்காக்களிலும், வீடுகளிலும் அழகுக்காகவும் இனிய நறுமணத்திற்காகவுமே கறிவேப்பிலை மரங்கள் கிளை பரப்பி அழகாக ஓங்கி வளர்ந்திருப்பதைப் பார்த்தேன்..
.. நமக்கோ கறிவேப்பிலை இல்லாத சமையல் நினைத்துப்பார்க்கமுடிவதில்லை..

தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான கறி, இரசம் போன்றவற்றிலும், வடை, முறுக்கு, சட்னி, குழம்பு, பொடி வகைகள், கறிவேப்பிலை சாதம் போன்ற உணவுகளிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உணவு வகைகளில் போடப்பட்டிருக்கும் கறிவேப்பிலையை உண்ணும் போது சிலர் எடுத்து வெளியில் போட்டுவிட்டே உண்பர். அநேகமானோர் இதனை சமைக்கும் உணவு பதார்த்தங்களில் போடப்படும் ஒரு கறிச்சுவையூட்டியாக அல்லது வாசனைப் பொருளாக மட்டுமே கருதி விடுகின்றனர்.

ஆனால் கறிவேப்பிலை வாசனைப் பொருளாக மட்டுமன்றி, சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணி..
 நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

 நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறும்,இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி கறுக்கும்.. 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது.

கண்பார்வை குறைவு நீங்கி தெளிவாகும்... பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் நீங்கும்..கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும்

கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் - மசாலாப் பொருட்களில் நல்ல வாசனை உடைய கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறது.. இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.  கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது  பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை கண்டறிந்துள்ளது.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிடியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர்.

அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது.

மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடுகையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.
பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

கறிவேப்பிலை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம்.
கறிவேப்பிலை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையை அணுகி கறிவேப்பிலை செடிகளை மானியத்துடன் பெற்றுச் செல்லலாம். கறிவேப்பிலை அதிக வருமானம் பெற்றுத்தரும் பயிராகும்.

ஒரு ஆண்டு பயிர் செய்தால் பல ஆண்டுகள் வரை பராமரித்து அதிக வருமானம் பெறலாம். நோய், பூச்சி ஆகியவை அதிக அளவில் தாக்காத பயிர் கறிவேப்பிலை ஆகும். இதனை பயிரிட அதிக வேலையாட்கள் தேவையில்லை. பராமரிப்பு செலவும் குறைவு.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...