Oct 14, 2012

பாகிஸ்தான் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தயார்: யுஏஇ


 பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தயார் என்றும், அதற்காக ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய விமானத்தை அனுப்பி வைப்பதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானுக்கான யுஏஇ தூதர் ஜமில் அஹமது கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், 
 தலிபான்களால் சுடப்பட்ட மலாலா (14) என்ற சிறுமியை மேல் சிகிச்சைக்காக யுஏஇ-க்கு அனுப்ப விரும்பினால் அதற்காக ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளோம்.
 மலாலாவுடன் உதவிக்காக வரும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கான விசா
ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள 3 மருத்துவமனைகளில், மலாலாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
எனினும், மலாலாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பெண் கல்விக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் மலாலா குரல் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தலீபான் பயங்கரவாதிகள், கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை துப்பாக்கியால் சுட்டனர். எனினும் படுகாயங்களுடன் உயிர் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...