Oct 11, 2012

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி


இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்- 2

புலியடி மூலி

கொல்லிமலை கிரிகை அரியலாம், புலியடி மூலி விபரம் சொல்லக் கேளு அரப்பளீசுவர் கோவிலுக்குப் பின்புறமாய் தென்கிழக்கு மூலையில் வழியே ஒரு நாழிகை தூரம் போனால் அங்கே ரெட்டைக்குண்டு மேடு உள்ளது. அது ரெட்டைக்குண்டு ஓடையென்று சொல்லப்படும்.

அந்த மேட்டில் முலைத்ததெல்லாம் புலியடி மூலிதான் அது குத்துச்செடி போல் முளைத்து ஒரு முள உயரமாயிருக்கும் செடி சுற்றிலும் கிளைகள் படர்ந்து பூமியில் சுற்றி படாந்துயிருக்கும். இலைகள் புலிப்பாதம் போல் இருக்கம். இலையைத் திருப்பிப் பார்த்தால் புலியைப் போலவே சாரை சாரையாய் கோடுகள் இருக்கும் இந்த இலை வெள்ளை, பச்சையாய் இருக்கும்.

இந்த இலையைப் பறித்து சாறு பிழிந்து கொண்டு, இரும்பைத் தகடு தட்டி சுருட்டி பழுக்கக் காய்ச்சி சாற்றில் மூன்றுமுறை துவைக்க (சுருக்கு கொடுக்க) செல்லு அரித்தது போல் இருக்கும் மீண்டும் மூன்றுமுறை சுருக்கு கொடுக்க இரும்பு தகடு கொஞ்சம் சிவந்து இருக்கும் அதை எடுத்துக்கொண்டு வெட்டி மூசையில் போட்டு வெங்காரம் கொடுத்து உருக்கி எடுத்து தகடு தட்டி காட்டு வெற்றிலையை அரைத்து தகடுக்கு கவசம் செய்து ஏழு சீலை மண் செய்து கெஜபுடத்தில் போட பவுனுக்கு மேலாய் மாற்று தோன்றும்.


“முப்பிரண்டை”
அந்தயிடத்துக்கு கீழ்புறமாய் சுற்றிப் பார்த்தால் முப்பிரண்டை காணம் அதைக் கொண்டு வந்து இடித்துச் சூரணம் செய்து திரிகடி அளவு பசும்பாலில் (காலை-மாலை) இருவேளை உண்ண அழியாத காயமாயிருக்கும், இதனை இடித்துப் பிழிந்த சாற்றில் இருபத்தியோரு முறை வெள்ளீயத்தை உருக்கிச் சாய்க்க வெள்ளியாகும்.

“பேரிலவ விருட்சம்”
கலிங்கத்திற்கு வடபுறமாய் ஒரு நாழிகை வழி தூரம் போனால் கற்பூர ஊசிக்கல்லும், நெருஞ்சிக் கல்லுமாய் இருக்கும் அதற்கு நேராக வடக்கே போனால் இரண்டு நாழிகையில் வடக்கப் புறமாய் ஒரு பேரிலவ விருட்சம் உண்டு. அதைச் சற்றி பனியாய் இருக்கும். ஜலம் மிகுதியாயிருக்கும், பாறை போல் தோன்றும் அவ்விடத்தில் மாதாக்கள் இருப்பார்கள்.

அவர்கள் பேசமாட்டார்கள் அவர்களைப் பணிந்து வணங்கினால், ஏன் வந்தாய் என்று கேட்பார்கள். உங்களிடம் பணிந்து தொண்டு செய்ய வந்தேன் என கூறினால், அள் கூர்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள். அதனால் இறைநிலை பேரின்பம் கிட்டும். அந்த உணர்வுடன் பேரிலவ விருட்சத்தைத் தழுவினால் உடனே சடைவிழும்.

அந்த கணமே எல்லா பதவியும் கிட்டும். காயசித்தியாகும், அவர்கள் பேசுவார்கள், சித்தர்களின் இரகசியங்களை உபதேசிப்பார்கள். அங்கே ஊரிக் கொண்டிருக்கும் ஜலத்தை சாப்பிட்டால் முதுமை போய் இளமையாகம்.


“மாயா கொல்லி புகழை” அந்த பேரிலவ விருட்சத்திற்கு மேற்கு புறம் ஒரு நாழிகை வழியில் செல்ல ஒரு கரடு உண்டு அதில் “மாயா கொல்லி புகழை”: உண்டு. அது தங்க நிறமாய் கூர்சம் புல் செடியைப் போல் (தர்ப்பை புல்) ஊசி மூக்கிலையாய் இருக்கும். அவ்விடம் போனால் மாய்கை, மயக்கம் உண்டாகம். அப்போது “என் தாயே லக்ஷ்மி சுவாகா என்று ஆயிரம் உரு செபித்து அப்பால் இலையை உருவித் தின்றால் காயசித்தியாகும். அறுபது காதம் பயணிக்க சித்தியாகும். எந்த ஊரை நினைத்தாலும் அவ்விடம் போய்ச் சேரலாம். சகல காரியமும் சித்தியாகும்.


“எருமைகணை விருட்சம்” அதற்க மேற்கே பாலாறு போல வடகிழக்காய் தோன்றும் அந்த ஆற்றுக்கு வடக்கே போனால் ஒரு மடு உண்டு, அதிலே எருமை மரம் வெகு கூட்டம் உண்டு, அதைக் கீறிப் பார்த்தால் கருமையாய் இருக்கம். கையில் ஒட்டும், அந்தப் பட்டையை ஒரு பலம் எடுத்து கோசலம் விட்டு, “சோ, வா, வாக்கு சுவாக” என்று 1028 உரு போட்டு 217 – சுற்று இடம் வலமாக சுற்றி வந்து கரநியாசம், அங்கநியாசம் பிராணபிரதிஷ்டை செய்து, உடனே அந்த மரத்தை துளைத்து கலயம் வைத்து மரத்துடன் சீலை மண் செய்து கட்டி விடவும், மூன்று நாழிகைக்குள் அந்த கலயத்தைப் பிரித்து அதில் வடிந்துள்ள பாலை ஒரு துட்டு எடையும், தேன் ஒரு காசு எடையும் மிளகு பொடி ஒரு பண விடையும் இந்த மூன்று மத்தித்து சாப்பிடவும், பின்பு  27-நாள் ஆன பிறகு “சீயும், கோ, வா” – என்று 1028 – உரு போட்டால் உலகம் உள்ளவரை காயத்தோடு வாழ்ந்து இருக்கலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...