Nov 25, 2012

வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ: 100 தொழிலாளர்கள் பலி

வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ: 100 தொழிலாளர்கள் பலிடாக்கா, நவ. 25-

வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே தஸ்ரீன் பேஷன் என்ற ஆடை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. பல அடுக்கு மாடிகளை கொண்ட இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதன் தரை தளத்தில் சாயப்பட்டறை உள்ளது.

நேற்று மாலை இங்கு திடீரென தீப்பிடித்தது. பின்னர் இந்த தீ தொழிற்சாலையின் 6-வது மாடி வரை பரவியது. அப்போது அங்கு
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கி தீயில் கருகினர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தும் தீயில் சிக்கி 100 பேர் பலியாகினர். பலர் தீயில் கருகி காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...