Nov 9, 2012

சலரோக நோயை உடனடியாய் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர சிறந்தது வெண்டிக்காய்



அநேகமானவர்களுக்கு இருக்கும் நோய்களில் ஒன்றுதான் சலரோக நோய். இந் நோய் குறிப்பாக வயது வந்தவர்களுக்கே அதிகம் ஏற்படுகின்ற போதிலும் வயது குறைந்தவர்களும் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 
சலரோக நோயை உடனடியாய் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர நாம் அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக்கொள்ள பயன்படுத்தும் வெண்டிக்காய் மிகப்பெறும் பங்கு வகிக்கிறது.
 
இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டிக் காயை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. தினம் இரண்டே இரண்டு வெண்டிக் காயை வெட்டி, இரவில் படுக்கப் போகுமுன், விதைகளை நீக்கிவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற போட்டு வைத்து மூடிவிடவும்.
 
காலையில் எழுந்தவுடன் வெண்டைக்காய் தோலையும், விதைகள் உதிர்ந்து கிடந்தால் அவைகளையும் ஒரு கரண்டியினால் எடுத்துப்போட்டு விட்டு, அந்த தண்ணீரை மட்டும் வெறும் வயிற்றில் அப்படியே குடித்து விடவும். 
 
இதுபோல் தொடர்ந்து செய்து வர சீனி சத்து அளவு சட்டென்று குறைந்து, கட்டுப்பாட்டில் இருக்கும். இதை எனது நண்பர் கடை பிடித்து வந்ததால் தெரிந்து கொண்ட பலன். 
 
இவ்வாறு குறித்த வியாதி உள்ளவர்கள் தினமும் குடித்து வந்தால் உங்கள் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...