Nov 29, 2012

ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால் முடி உதிரும்

ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால் முடி உதிரும்
[Monday, 2012-11-26
News Service கூந்தலை காய வைப்பதற்கு 'ஹேர் ட்ரையரை' பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. இயற்கையாக கூந்தலை காய வைப்பது தான் கூந்தலுக்கு ஆரோக்கியமானது. அதை விட்டுவிட்டு, அந்த கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், தற்போது அனைவரும் வருத்தப்படும் பிரச்சனையில் ஒன்றான கூந்தல் உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். கூந்தல் உதிருவதற்கு ஒரு காரணம் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது. ஏனெனில் குளித்தது முடித்ததும் முடித்துளைகள் சற்று தளர்ந்து இருக்கும்.
  
அப்போது அந்த இடத்தில் ட்ரையரை பயன்படுத்தும் போது, அதிகமான வெப்பம் பட்டு கூந்தல் எளிதில் உதிருகிறது. மேலும் தலையில் ஏதேனும் அழுக்குகள் இருந்தால் கூட, அது அப்படியே தங்கிவிடும். பின் கூந்தல் உதிர்தலை தடுப்பது கடினமாகிவிடும். எப்போது தலைக்கு குளித்தாலும் கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதால், அதிக அளவு வெப்பம்
படுவதால், கூந்தலின் உள்ளே உள்ள லேயர்கள் பாதிக்கப்பட்டு, முனைகளில் நாளடைவில் வெடிப்புகளை ஏற்படுத்திவிடும்.
தொடர்ச்சியாக ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், சிறிது நாட்களில் கூந்தல் பொலிவிழந்து, இயற்கையான அழகை இழந்துவிடும். மேலும் உபயோகிக்கும் போதெல்லாம், சிறு சிறு முடிகளாக உதிரும். பின் அது அழகை இழந்து, கெட்டதாக காட்சியளிக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...