Dec 25, 2012

மாற்றங்கள் - ஜனவரி 1 முதல் பிரான்சில்..... (வரி, சம்பளம்,போக்குவரத்து...)






ஜனவரி மாதம் முதலாம் திகதி 2013ம் ஆண்டு முதல் கட்டணங்கள், வரிகள், போக்குவரத்து, அடிப்படைச் சம்பளம் மேலும் பலவற்றில் மாற்றங்கள் பிரான்சின் அரசாங்கத்தால் புதிய பாதீட்டின் அடிப்படையில் கொண்டுவரப்படுகின்றது. இவ் விபரங்களை முதன் முதலில் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுக்க நாம் தருகின்றோம்.
 
Livret A : சேமிப்புப் புத்தகத்தில் வைத்திருப்புத் தொகையின் கட்டுப்பாடு 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வைப்புத் தொகையின் அளவு 22,950 யூரோக்களாக அதிகரிக்கப்படுகின்றது.
 
Impôt sur le revenu (sur les revenus 2012) (2012ம் ஆண்டிற்கான வருமானவரி): வருமான வரியின் கணக்கீட்டு அளவு இரண்டாவது வருடமாக அப்டியே தொடர்கின்றது. இது கிட்டத்த வரிசெலுத்துவோர் தொகையில் 2 சதவீதத்தை அதிகமாத் தந்துள்ளது. மிதமான வருமானமுள்ளோர் 7,4 மில்லியன் மக்கள் செலுத்தும் இந்த 2 சதவீதம் சமூக நலன் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்டுகின்றது. அதன் மூலம் 20ற்கும் மேற்றப்பட்ட சமூகநலத்திட்டங்கள் (வீட்டிலிருந்து வேலைவாய்ப்பு, பிள்ளைப்பராமரிப்பு, நிலையான சக்தி மற்றும் எரிபொருள் சேமிப்பிற்கான வீட்டு வேலைகள், மேலும் பல துறைகள்....) பயன்பெற உபயோகிக்படுகின்றது.
 
SMIC: பிரான்சின் தொழிலாளர் சட்டப்படி தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்ட வேண்டிய சம்பளத்தில் ஆக்க குறைந்த அளவு அரசால் நிர்ணயிக்ப்படுவது வழமை. இதுவே Salaire minimum interprofessionnel de croissance (SMIC) எனப்படுகின்றது. இதன் தொகை ஜனவரி மாதம் முதலாம் திகதி 2013ம் ஆண்டு முதல்  மணித்தியாலத்திற்கு 9,43 யூரோவாக (Brut) உயர்கின்றது. அதாவது வாரத்திற்கு 35 மணித்தியாலங்கள் வேலை செய்தால் மாதச் சம்பளம் 1430யூரோ 22  சதமாக (Brut) உயர்கின்றது. 

RSA : Revenu de solidarité active (RSA)எனப்படும் அரசு உதவிப்பணம் குழந்தைகளற்ற தனி நபருக்கு 483 யூரோக்களாகவும் குழந்தைகளற்ற தம்பதிகளுக்கு 724 யூரோக்களாகவும் உயர்கின்றது. இதற்கான நிபந்தைனையாக விதிக்கப்பட்ட குடும்பவருமானத்தின் அளவு 2,1 சதவீதத்தால் மீள்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 
Emploi d'avenir (எதர்கால வேலைவாய்ப்பு): பின்தங்கிய பகுதிகளிலிருந்து கல்விகற்று எதிர்காலத்தில் ஆசிரியராக விரும்பும் மாணவர்களுக்குப் பகுதிநேர வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு மாதம் 900 யூரோக்கள் பெற வசதி செய்யப்படும்.
 
முத்திரை: முன்னுரிமைக் கடிதங்களுக்கான ( lettre prioritaire) முத்திரை க் கட்டணம் 60 சதத்திலிருந்து 63 சதமாக உயர்வடைகின்றது. பசுமைக் கடிதம் ( lettre verte) 57 சத்திலிருந்து 58 சதமாக உயர்வடைகின்றது.
 
சக்தி: எரிவாயுக் கட்டணம் (GAZ) 2,4 சதவீத்தாலும் மின்கட்டணம் 2,5 சதவீத்தாலும் அதிகரிக்கின்றது.
 
Redevance TV (தொலைக்காட்சி வரி) : பிரான்சிற்குள் தொலைக்காட்சி வரி 6 யூரோக்கள் அதிகரித்து 131 யூரோக்களாகவும் கடல்தாண்டிய பிரான்சின் பகுதிகளுக்குள் (outre-mer) 5 யூரோக்கள் அதிகரித்து 85 யூரோக்களாகவும் அதிகரிக்கின்றது.
 
RATP: பிரயாணக் கட்டணங்கள் சராசரியாக 2,4 சதவுpத்தால் அதிகரிக்கிடூன்றது. NAVIGO PASS முதலாம் மற்றும் 2ம் பகுதிகளுக்கான (ZONES) கட்டணம் 65 யூரோ 10 சதமாக அதிகரிக்கின்றது. பத்து மெட்ரோ பிரயாண அனுமதி அட்டைக் கட்டு (carnet de 10 tickets ) 13€30 ஆக உயர்கின்றது. ஒற்றைப் பிரயாண அனுமதி அட்டை 1€70 ஆகவே உள்ளது.
 
TAXI: இன்று பொருளாதார அமைச்சு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் வாடகை வாகனத்தின் (TAXI)அடிப்படை பிரயாணக் கட்டணம் 2,6 சத வீதத்தால் உயர்கின்றது. வாடகை வாகனத்தின் கட்டணங்கள் அரசாங்கத்தால் நிரணயிக்கப்டுவதால் வாடகை வாகன உரிமையாளர்கள் இரண்டு மாத கால எல்லைக்குள் தமது கட்டணக் கருவிகளை மாற்ற வேண்டும். அத்தோடு இந்த மாற்றத்திற்கான நிபந்தனைகளை அச்சிட்டு வாடிக்கையாளர் பார்வைக்குத் தகுந்தபடி ஒட்டியிருத்தல் வேண்டும். இதன் மூலம் மட்டுமே அவர்கள் புதிய கட்டணத்திற்கு மாற முடியும்.
 
வாகனங்கள் : 135 மற்றும் 140 கிராம் கரியமில வாயுவை கிலோமீற்றர் ஒன்றிற்கு வெளியேற்றும் (CO2/km) வாகனங்களுக்கான வரி 100 யூரோக்களாக நிர்ணயிக்கப்ட்டுள்ளது. தற்போது 141g CO2/km வாகனங்களுக்குத் தான் இவ் அபராத வரி பெறப்பட்டு வந்தது. அத்தோடு புதிய 200g CO2/km  வெளியிடும் வாகனங்களுக்கு 6000 யூரோக்ள் வரை அபராத வரி விதிக்கப்டும்.
 
மருத்துவம்: சுய விருப்ப்பின் பேரில் செய்யும் கருக்லைப்புக்களுக்கான (interruptions volontaires de grossesse IVG) கட்டணம் 100 சதவீதம் அரசால் பொறுப்பேற்கப்படும். அத்தோடு 15 முதல் 18 வயதான பெண் பிள்ளைகளுக்கு கருத்தடை மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
 
வீடு: வீடுகளை வாங்கி வாடகைக்குவிடும் முதலீட்டாளர்களுக்கான சட்டமான "Scellier" ஆனது புதிய "Duflot" சட்டத்தினால் மாற்றீடு செய்ப்பட்டுள்ளது. இது கடுமையான நிபந்தனைகளைக கொண்டது. ஆனாலும் குறிப்பிடும்படியான வரிவிடுப்பினைக் கொண்டுள்ளது. ஒன்பது வருடங்களுக்கு 18 சதவீதமாக 3 இலட்சம் யூரோக்கள் வரையான முதலீடுகளிற்கான வருமான வரி கணக்கிடப்பட்டுள்து.
 
 
Bière: அரை அளவு எனப்டும் (demi pression) பியரின் கட்டணம் அதிகரிக்கின்றது. பியர் தயாரிப்பு நிறுவனங்களின் வரி அதிகரிப்புக் காரணமாக இதுவரை 2யூரோ 60 சதமாகவிருந்த அரை அளவு 3யூரோக்களாக அதிகரிக்கின்றது. BERCY யில் அமைந்துள்ள நிதி அமைச்சின் கணக்கின்படி கால் லிட்டர் பியருக்கு 5,5 சத அதிகரிப்பை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...