Dec 1, 2012

ஹார்ட் டிஸ்க்


Technorati Tags: ,,,
இன்று நாம் ஹார்ட் டிஸ்கை ப்ற்றி தெரிந்து கொள்ளுவோம்.ஹார்ட் டிஸ்க் என்பது உங்கள் தகவல்களை சேமித்து வைக்க உதவும் ஒரு பொருள். இந்த தகவல் சேமிப்பு கிடங்கு ஒரு நிரந்தா சேமிப்பு பெட்டகம் அதாவது நீங்கள் அழிக்கும் வரை அந்த தகவல் அதே இடத்தில் இருக்கும் இதனை நான் வாலட்யில் மெம்மரி (Non-Volatile Memory) என்று கூருவோம்.

தற்போது சந்தயில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் 1 டெரா பைட் (Tera Byte) அளவு வரை கிடைக்கிறது. இந்த ஹார்ட் டிஸ்க் இரண்டு வகையுண்டு அவை சடா (SATA) மற்றும் ஐடிஈ (IDE). சடா தொழில்நுட்பம் என்பது புதிய முறை இதில் டேட்டா டிரான்ஸ்பர் மிகவும் வேகமாக இறுக்கும்.

ide-1

ஐடிஈ தொழில்நுட்பம் தகவல் பறிமாற்றத்தில் மிகவும் மெதுவாக இறுக்கும். தகவல் பறிமாற்ற உதவும் கேபிள்களை பஸ்(Bus) என்று அழைப்பர்.சடா பஸ்கள் மிகவும் சிறியதாக இருக்கும் ஆனால் ஐடிஈ பஸ்கள் மிகவும் பெறிதாக பட்டையாகவும் இருக்கும். ஐடிஈகளை படா (PATA)) என்றும் அழைப்பர்.சடா என்பது சீரியல் அடா (Serial ATA) என்பதன் சுருக்கமாகும்,படா என்பது பாரலல்
அடா (Parallel ATA). சடா தொழில்நுட்பதில் 7 விசைகள் (Conductors) மற்றுமே உண்டு ஆனால் படாவில் 40 விசைகள் இருக்கும் ஆக இரண்டு ஜோடி விசைகள் கொண்டு தகவல் பறிமாறபடும் ஆகவே சடாவில் மிகவும் விரைவாக தகவல் பறிமாறமுடியும்.

  sata15pin sata-hard-drive-power-cable-connector SATA-Signal-Cable-1 ide-3
இங்கு கீழே இருக்கும் படத்தில் சடா மற்றும் படா ஆகிய ஹார்ட் டிஸ்கையும் அதன் அகலங்களையும் காணலாம். சடா எவ்வளவு சிறியதாக இருக்கிறது என்றும் படா எவ்வளவு பெறியதாக இருக்கிறது எண்று பாருங்கள். புதிய தொழில்நுட்பம் எல்லா வேலைகளையும் மிகவும் வேகமாக முடிக்க உதவுகிறது.

sata-ide

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...