Dec 18, 2012

சந்திரனில் இரு விண்கலங்களை மோதி வெடிக்கச் செய்த நாசா விஞ்ஞானிகள்!

சந்திரனில் இரு விண்கலங்களை மோதி வெடிக்கச் செய்த நாசா விஞ்ஞானிகள்!
[Tuesday, 2012-12-18
News Service அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது. இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின. கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்த ஆய்வில் நிலவின் ஆழமான பகுதியில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உடைந்த திடப்பொருட்களின் கழிவுகள் படிந்துள்ளதாக தெரிய வந்தது.
  
மேலும் 487 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிலவை ஆய்வு செய்த இந்த விண்வெளி ஓடங்கள், 1,14,000 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 2 விண்வெளி ஓடங்களில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்தது. சந்திரனின் ஈர்ப்பு விசையில் இருந்து 11 கி.மீ தூரத்தில் சுற்றி
வந்த, இந்த 2 விண்வெளி ஓடங்களின் இயக்கமும் கடந்த 9-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை இந்த விண்வெளி ஓடங்களை, ஒன்றன் பின் ஒன்றாக நிலவின் மேற்பரப்பில் உள்ள மலைகளின் மீது மோதி வெடிக்கச் செய்ய நாசா திட்டமிட்டது. இதனையடுத்து நாசா விண்வெளி நிலையத்திலிருந்தபடி எப், பிளோ என பெயரிடப்பட்ட அந்த 2 விண்வெளி ஓடங்களையும், நிலவின் மேற்பரப்பில் உள்ள மலையின் மீது மோதச்செய்து, அமெரிக்க விஞ்ஞானிகள் தகர்த்தனர்.
30 வினாடி இடைவெளியில் எப்-பும், பிளோ-வும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி வெடித்துச் சிதறின. இருளான நேரத்தில் இந்த மோதல் நிகழ்ந்ததால், பூமியில் இருந்து இதை பார்க்க முடியவில்லை. இந்த விண்வெளி ஓடங்கள் மோதி தகர்ந்த இடத்திற்கு, அமெரிக்காவின் முதல் விண்வெளி பெண் வீராங்கனையான சேல்லி ரைட்-டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மரணமடைந்த சேல்லி ரைட் நினைவாக, இந்த பெயரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையங்கள் அங்கீகரிக்க வேண்டும் என நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...