Aug 19, 2012

முதலிடத்தை நோக்கி அசின்?

. மிகச்சாதாரண தோற்றம் கொண்டவர் அசின். அவரால் பாலிவுட் கடலில் நீந்தமுடியுமா என்று வட இந்திய மீடியாக்களால் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது நிலமையே தலைகீழ்! பாலிவுட்டின் இரண்டாவது பெரிய நாயகி என்று அதே மீடியாக்கள் அவரை புகழ்கின்றன. அசின் கடந்த ஆண்டு  நடித்த ‘போல்பச்சன்’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே அவர் நடித்த ‘கஜினி’, ரெடி’,‘ஹவுஸ்புல்-2’ படங்களும்  100 கோடிக்கு மேல் வசூலித்தன. இதனால் முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு அதிரடியாக உயர்ந்து விட்டார் அசின்!



கரீனா கபூர்  நடித்த ‘3 இடியட்ஸ்’, ‘கோல்மால் 3‘, ‘பாடிகார்ட்’, ‘ராஜன்’ படங்களும் ரூ.100 கோடி வசூலித்தன. கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் அசின் இருக்கிறார் என்று ஃபிலிம் பேர் பத்திரிகை அசினுக்கு பாரட்டுப்பத்திரம் வாசித்திருக்கிறது. இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

விக்ரம் நடிக்கும் தாண்டவம் திரைப்பட இசை வெளியீட்டு புகைப்படங்கள்
மாற்றான் இசை வெளியீட்டு படங்கள் முழுமையாக இணைப்புக்கள் இங்கே

இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பதாக இருந்த தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் உருவாக இருந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அசின், தற்போது அந்தப் படம் கைவிடப்பட்டதன் காரணமாக, கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் யோஹன் படத்தில் முதன்மைக் கதாநாயகியாக நடிப்பார் என்று கௌதம் மேனன் வட்டாரத்தில் சொல்லி வருகிறார்கள். ஆனால் பாலிவுட்டில் அதற்கு வாய்ப்பே தரமாட்டார்கள் போலிருக்கிறது! காரணம் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் அசினையே ஜோடியாக ஒப்பந்தம் செய்யும்படி இயக்குனர்களை நிர்ப்பந்தித்து வருகிறார்களாம். இதனால் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறராம் அசின்!

இதுபற்றி தனது உணர்வை வெளிபடுத்தியிருக்கிறார் அசின், “நான் எவ்வளவு படங்களில் நடிக்கிறேன் என்று எண்ணிக்கையை பார்ப்பது இல்லை. நடிக்கும் படங்களிலும் திருப்தியாக வேலை செய்கிறேன். இந்தி திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவில் எனக்கு பாதுகாவலர்களோ, உறவினர்களோ ஆண் நண்பர்கள் என்றோ எவரும் இல்லை. எனது சொந்த காலில்தான் வளர்ந்துள்ளேன். தென்னிந்திய நடிகைகளை இந்தி ரசிகர்கள் இதுபோல் ஏற்றுக் கொள்வது அபூர்வமானது. இதற்காக நன்றி தெரிவிக்கிறேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார். தற்போது கரினா கபூர் நடித்து முடித்திருக்கும் ‘ஹீரோயின்’ படம் எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பதைப் பொறுத்து அசின் முதல் இடத்துக்கு வருவாரா இல்லையா என்பது தெரிய வரும் என்று கொழுத்திப் போட்டிருகிறார்கள் பாலிவுட்டில்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...