Dec 7, 2012

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 7.3 அலகுகள் பதிவு- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

டோக்கியா: ஜப்பான் நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகள் பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் உணரப்பட்ட போது அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சென்டாய் பகுதியில் கடந்த ஓராண்டில் 9-வது முறையாக இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலநடுக்கத்தால் கடந்த 2011-ம் ஆண்டைப் போல பெரும் சுனாமி பேரலைகளை உருவாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரையிலான உயரத்துக்கே அலைகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...