Dec 7, 2012

ஜப்பானுக்கு அருகில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை வாபஸ்



ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் இன்று மாலை கடலின் மத்தியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகி இருந்ததால், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. எதிர்பார்த்தது போன்றே சில சிறியளவிலான சுனாமி கரையோர கிராமங்களை தாக்கியுள்ளது.  எனினும் தற்போது ஜப்பானின் வடகிழக்கு நகரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் நகர்ப்புறங்களில் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை
விட்டு பீதியுடன் வெளியேறியுள்ளனர். கரையோரப்பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக மலைப்பகுதிகளுக்கு இடம்பெயருமாறு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
மேலும் இன்று மாலை 5.40 தொடக்கம் 6.00 மணிக்குள் ஜப்பானின் இவேட், ஃபுகுஷிமா, அமோரி மற்றும் இபார்க்கி ஆகிய பகுதிகளை  சுனாமி தாக்கலாம் எனும் அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. எனினும் தற்போது அபாய எச்சரிக்கைகள் யாவும் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலநடுக்கத்தினால் 9 பேர் காயமடைந்திருப்பதாகவும், பொதுச்சொத்துக்கள் சில சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புகுஷிமா அணு உலைக்கு இந்நிலநடுக்கத்தினால் எந்த வித பாதிப்பும் இல்லை என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால், 20,000 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை ஜப்பானுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, ஊடக அலுவலகம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...