Jan 20, 2013

2012ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஓர் பார்வை!

News Service 2012 இல் உலகம் முழுவதும் இணைய தகவல் தொழில்நுட்ப புரட்சி எப்படி இருந்தது என முற்று முழுதாக புள்ளிவிபரங்களை மாத்திரம் கொண்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளது Royal Pingdom எனும் இணைய கண்காணிப்பு நிறுவனம். அத்தகவல்கள் இவை தான்!
  
2012 ஆக்டோபரில் Facebook 1 பில்லியன் பயனர்களை எட்டியுள்ளது. 2012 டிசம்பரில் டுவிட்டர் 200 மில்லியன் பயனர்களைத் தொட்டுள்ளது.
2012 வருடம் முழுவதும் உலகம் முழுதுமிருந்து மொத்தம் 2.2 பில்லியன் மின்னஞ்சல் அக்கவுண்டுக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 425 மில்லியன் பேர் ஜீமெயில் அக்கவுண்டில் பதிவு செய்துள்ளனர். ஏனைய மின்னஞ்சல்களை விட ஜீமெயிலை பயன்படுத்தியவர்கள் தான் அதிகம்.
2012 முடிவில் இணையத்தில் காணப்படும் வெப்சைட்டுக்களின் எண்ணிக்கை
634 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கையில் 51 மில்லியன் அதிகரித்து வருகின்றது. இப்புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது கடலளவு பிரம்மாண்டமான இணையத் தகவல் களஞ்சியத்தில் சாதாரண ஒரு பயனர் கையாள்வது வெறும் கையளவு நீர் என ஒப்பிட முடியும்.
2012 இல் மட்டும் 246 மில்லியன் டொமைன் பெயர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 1985 இல் இருந்து இதுவரை பதிவு செய்யப்பட்ட .com என முடியும் டொமைன் பெயர்கள் 100 மில்லியனை எட்டியுள்ளது. உலகம் முழுதும் இணையத்தைப் பாவிக்கும் பயனர்களின் (Users) எண்ணிக்கை 2.4 பில்லியனை எட்டியுள்ளது. 2012 இல் மட்டும் 1.2 ட்ரில்லியன் தடவை கூகிளில் இணையத்தளங்கள் தேடப் பட்டுள்ளன.
இன்னமும் சொல்லப் போனால் 2012 ஆம் ஆண்டு சராசரியாக Facebook இல் 2.7 பில்லியன் லைக்ஸ் ஒவ்வொரு நாளும் கிளிக் பண்ணப் படுகின்றன. மேலும் 175 மில்லியன் டுவீட்டுக்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் அனுப்பப் பட்டுள்ளன. இதைவிட கூகிள் +1 பட்டன் ஒவ்வொரு நாளும் 5 பில்லியன் தடவை அமத்தப் பட்டுள்ளது.
2012 இறுதியில் சுமார் 1.3 பில்லியன் ஸ்மார்ட் போன்கள் பாவனைக்கு வந்துள்ளன. YouTube இல் 4 பில்லியன் மணித்தியாலங்கள் அளவுடைய வீடியோக்கள் ஒவ்வொரு மாதமும் பார்க்கப்பட்டுள்ளன. Facebook இல் ஒவ்வொரு மாதமும் 7 பெட்டா பைட்ஸ் (Petabytes) போட்டோக்கள் சேர்க்கப் படுகின்றன என்கிறது இப் புள்ளிவிபரம்.
இத்தகவல்களை கேட்டதும், அண்மைய திரைப்படம் ஒன்றுக்காக கவிஞர் விவேகா எழுதிய பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது. 'நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நேபர் பேரே தெரியாது. ஆனா பேஸ்புக்ல உலகம் பூரா ஃபிரெண்ட தேடுறோம்.'

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...