Feb 11, 2013

உடல் நோயை தீர்க்கும் பாகல்

மாற்றம் செய்த நேரம்:2/11/2013The leaves of bitter gourd has high medicinal properties. Bitter gourd juice extracted from leaves, arumaruntakum for many diseases.   Grind the leaves drop throughout the body by the force of ten, rash, itching, parantoti would like.பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு  அருமருந்தாகும். இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்து போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து  விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக்  கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண்  நோய் குணமாகும். இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்  பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும். பாகல் இலைச்  சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ்  எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். ஓர்  அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால்  காசநோயை மட்டுப்படுத்தும். பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும்  பயனளிக்கக் கூடியது.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர். பெரு நாட்டில் பாகற்காயை  அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு  டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...