Feb 13, 2013

சர்வோதயா இயக்கத்தலைவர் ஜெகன்னாதன் மறைவு : தலைவர்கள் அஞ்சலி



சர்வோதய இயக்கத்தலைவர் ஜெகன்னாதன் மறைவுக்கு  அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி விடுத்து வருகின்றனர். 
சர்வோதய மூத்த தலைவரும் காந்தி, வினோபாவே ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு பணியாற்றியவருமான, ஜெகன்னாதன் திண்டுக்கலில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது 95வயதில் காலமானார்.

 அவரது இழப்பு, சர்வோதய இயக்கத்துக்கு மட்டும் அல்லாமல், அகிம்சை வழியில் பாடுபடும் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடருவதே, அவருக்கு செலுத்தும் அஞ்சலி என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில் ஜெகன்னாதன், பூமிதான இயகத்தில் முழுமையாக ஈடுபட்டு, வினோபாவே உடன் இணைந்து, ஏழை, எளிய மக்களுக்கு உதவினார். தமிழகத்தில், கிராமதான இயக்கத்தை செயல்படுத்தியவர். ஜெகநாதனை இழந்து வாடும், அவரது மனைவி கிருஷ்ணம்மாள் மற்றும் சர்வோதய இயக்கத் தொடண்டர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ தனது இரங்கல் செதியில் சுதந்திரப் போராட்டத்தோடு, தேச பணிகளை முடித்துக் கொள்ளாமல், நாடு முழுவதும் கால்நடையாக சென்று, செல்வந்தர்களிடம் நிலத்தைப் பெற்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியவர் ஜெகநாதன். நோபல் பரிசுக்கு இணையான, சுவீடன் நாட்டு உயரிய விருதைப் பெற்றவர். பொது வாழ்வில் இருப்போருக்கு, வழிகாட்டியாக இருப்பவர். அவரை இழந்து வாடும், அவரது மனைவி மற்றும் சர்வோதய இயக்க தொண்டர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம் என்றார்.

தலித் மக்களின் முன்னேற்றத்ற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காக ஜெகன்னாதன் மற்றும் அவரது மனைவியார் கிருஷ்ணம்மாள் ஆகியோர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...