Mar 24, 2013

600 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, இரு போப் ஆண்டவர்கள் சந்திப்பு!



News Service பதவி விலகிய போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட்டை புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சந்தித்து பேசினார். 600 ஆண்டு வரலாற்றில் 2 போப்கள் சந்திப்பது இதுவே முதல் முறை. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். இந்த பதவியில் இருந்த 16ம் போப் பெனடிக்ட், கடந்த மாதம் 28ம் தேதி பதவி விலகினார். முதுமை காரணமாக போப் ஆண்டவருக்கு உரிய பணிகளை தம்மால் மேற்கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
  
கடந்த 600 ஆண்டு கால வரலாற்றில் ஒரு போப் பதவி விலகுவது இது முதல்முறை. இதன்பின், புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பொறுப்பேற்றார்.தெற்கு ரோமில் போப் ஆண்டவர் கோடைகாலத்தில் தங்கும் காஸ்டெல் கன்டோல்போ மாளிகை உள்ளது. இங்குதான் பழைய போப் பெனடிக்ட் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில், வாடிகனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் போப் பிரான்சிஸ் நேற்று காஸ்டெல் கன்டோல்போவுக்கு வந்தார். அங்கு போப் பெனடிக்ட்டை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். இருவரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். அவர்கள் சந்திப்பை முன்னிட்டு, காஸ்டெல் கன்டோல்போ சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...