Mar 3, 2013

பிரம்மாண்டமாக தயாராகிறது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா!




  • 0
     

cinemaநூறாண்டு காணும் இந்திய சினிமாவைக் கொண்டாட பிரமாண்ட விழா எடுக்கிறது தமிழ் சினிமா. இந்த விழாவில் இந்திய சினிமாவின் சாதனை நாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாஸன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள். இந்திய மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த விஷயம் சினிமா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, வங்காள, ஒரியா, போஜ்புரி மொழிகளில் சினிமாக்கள் ஏராளமாக தயாராகி வருகின்றன.
இந்தியாவில் சினிமா படங்கள் உருவாக ஆரம்பித்து. 100 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம்,
இன்றைக்கு சினிமா அந்த மொழி மாநிலத் தலைநகர்களில் தயாராகின்றன. ஆனால், ஆரம்பத்தில் மும்பையை விட அதிகமாக சென்னையில்தான் அனைத்து மொழி சினிமாக்களும் தயாராகின.
பெரும்பாலான இந்திப் படங்கள், சென்னை ஸ்டுடியோக்களில் உருவானது ஒரு இனிய வரலாறு. எண்பதுகளுக்குப் பிறகுதான் சென்னையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சினிமா இடம் பெயர்ந்தது.
எனவே இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விழாவுக்கு பிலிம்சேம்பர் ஏற்பாடு செய்துள்ளது. இதுபற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் கூறுவகையில், ‘இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தென்னிந்திய சினிமா துறை தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி ஏப்ரல் 26, 27, 28ம் தேதிகளில் விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். விழா தொடக்கத்தில் திரைப்பட உருவாக்கம் பற்றிய பயிற்சிபட்டறை நடத்த பேசிவருகிறோம். மாலையில் நடனம், இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும்.
கடைசி நாளன்று இந்திய சினிமாவின் முக்கியமான முகங்கள் பங்குபெறும் வகையில் விழாவை நடத்த இருக்கிறோம். சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் விழா நடைபெறும். தற்போது அங்கு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சரியான நேரத்தில் அரங்கம் கிடைக்க உதவுமாறு கேட்கப் போகிறோம்,’ என்றார். இந்த விழாவில் தென்னிந்திய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், அம்பரீஷ், சிரஞ்சீவி உட்பட பலர் கலந்துகொள்கிறார்கள். அமிதாப் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்களை அழைக்கும் திட்டமும் உள்ளதாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...