Mar 23, 2013

முக அழகு - பயன்தரும் எளிய குறிப்புக்கள்..

News Service * முள்ளங்கி சாறும், தயிரும் கலந்து தேய்த்து ஊறியதும் கழுவி வர முகம் பளபளப்பாகும்.
* எலுமிச்சைப்பழத் தோலை வைத்து பொடித்து பன்னீர் அல்லது இளநீர் கலந்து தேய்த்து வர முகம் பொலிவாகும். சுருக்கம் மறையும்.
* நான்கு கரண்டி தேங்காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, வாரம் ஒரிரு முறை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.
  
* பப்பாளிப்பழத்தை பிசைந்து சிறிதளவு தேன், பாலேடு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின் கழுவி வர பளிச் சென மாறும்.
* பாசிப் பருப்பு மாவை உடம்பில் போட்டுக் குளித்து வந்தால் வியர்வை வாடை வராது.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...