Mar 28, 2013

உடலுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கும் ஒரு இரத்தப் பரிசோதனை நிலையம்



அரை அங்குலம் நீளமும் தீக்குச்சி தடிமனுமே கொண்ட கருவி இதுநம்முடைய தோலுக்கு அடியில் பொருத்தப்படுகின்ற ஒரு சிறு கருவி மூலம் நம்முடைய இரத்தப் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் கைத்தொலைபேசியில் பார்க்க வகை செய்யும் கண்டுபிடிப்பு ஒன்றைத் தாம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அரை அங்குலம் நீலமும் தீக்குச்சியின் தடிமனுமே கொண்ட இக்கருவியின் மாடல் ஒன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
நம் இரத்தத்திலிருந்து ஐந்து உட்கூறுகளின் அளவுகளை இந்தக் கருவி உடனுக்குடன் தெரிவிக்குமாம்.
இந்தக் கருவியிலிருந்து பரிசோதனை முடிவுகள் ரேடியோ அலைகள்
மூலமாகவும், புளூடூத் கம்பியற்ற தகவல் பரிமாற்றம் மூலமாகவும் மருத்துவருக்கு தெரிவிக்கப்படும்.
இன்னும் நான்கு ஆண்டுகளிலேயே இந்தக் கருவி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஒரு ஊசியைக் கொண்டு நம் உடலில் புஜம் கால், வயிறு போன்ற ஒரு இடத்தில் தோலுக்கு அடியில் தசையின் மேற்பகுதியில் இந்த சிறு கருவியை வைத்துவிட முடியும் என்றும், அவ்வாறு இக்கருவியை வைத்தால் மாதக் கணக்கில் அது அங்கிருந்தபடி இரத்தப் பரிசோதனை முடிவை வேண்டுமானபோது வழங்கிக்கொண்டிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இரத்தித்தில் கொழுப்பின் அளவு இனிப்பின் அளவு ஆகியவற்றோடு மருத்துவர்களுக்கு தேவைப்படும் வேறு சில உட்கூறு அளவுகளையும் கண்டறியும் வல்லமை இந்த சிறு கருவிக்கு உண்டு.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற வாழ்க்கை முறை சார் நோய்களை உடையவர்களுக்கும், கீமோதெரபி போன்ற சிகிச்சைகளைப் பெறுகின்ற புற்றுநோயாளிகளுக்கும் இந்தக் கருவி ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எகோல் பாலிடெக்னிக் பெடெரால் த லௌசான் என்ற கல்வியமைப்பைச் சேர்ந்த பேராசியர் ஜியோவனி டெ மிஷெலியும் விஞ்ஞானி சண்ட்ரோ கர்ராராவும் கூறுகின்றனர்.
இக்கருவியின் உதவியால் ஒரே நேரத்தில் பல இரத்தக் கூறுகளின் அளவுகளை அறிந்துகொள்ள முடியும் என்றும், ஊசி வலியை திரும்பத் திரும்ப அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லாது செய்துவிடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...