Mar 7, 2013

அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆபிரிக்க காட்டு யானைகள்!Top News


அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆபிரிக்க காட்டு யானைகள்!Top News
[Wednesday, 2013-03-06
News Service கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஆப்ரிக்க காட்டு யானைகளின் எண்ணிக்கையில் 62 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக, வனவிலங்குகளின் பாதுகாப்புக்கான அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இந்த போக்கு இப்படியே தொடருமானால், ஆப்ரிக்க காட்டு யானை இனமே அடுத்த பத்து ஆண்டுகளில் இல்லாமல் அழிந்துபோகும் என்று அந்த அறிக்கையில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை தயாரித்த 60 வனவியல் விஞ்ஞானிகளுக்கு தலைமை தாங்கிய ஸ்டிர்லிங் பல்கலைக்கழகத்தைச் சேந்த முனைவர் பியோனா மெய்சிலிஸ், யானைகளின் இந்த வீழ்ச்சியின் அளவு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கிறார். சுமார்
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த காட்டுயானைகள் பெரும் கூட்டமாக சுற்றித்திரிந்த பகுதிகளில் இன்று மிகச்சில யானைகளே இருப்பதையும் இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
  
கேமரூன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, காபன் மற்றும் காங்கோ குடியரசு ஆகிய பிரதேசங்களில் இருக்கும் காடுகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் எட்டாயிரம் மைல்கள் நடந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுதான், இதுவரை ஆப்ரிக்க காட்டு யானைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வாக கருதப்படுகிறது. யானைத்தந்தம் விற்பனைக்குத் தடை தேவை அடர்ந்த காடுகளில் அதிகரித்த மனித நடமாட்டமே காட்டு யானைகளின் இந்த வேகமான அழிவுக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் நடமாடாத காட்டுப்பிரதேசத்தில் மூன்றில் ஒரு பகுதிகளில் இப்போது நெடுஞ்சாலைகள் மூலம் மனித நடமாட்டம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இது யானைகளின் அழிவில் முடிவதாக கூறுகிறார்கள்.
தூரகிழக்கு நாடுகளில் அதிகரித்த யானைத்தந்தங்களுக்கான தேவைகளும், ஆப்ரிக்க காட்டு யானைகளின் அழிவை ஊக்குவிக்கும் காரணிகளாக பார்க்கப்படுகிறது. யானைத்தந்த விற்பனையை உலக நாடுகள் தடைசெய்வது ஆப்ரிக்க யானைகளின் அழிவைதடுக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்திருக்கும் தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஷினவத்ரா, தம் நாட்டில் யானைத்தந்தத்தை முழுமையாக தடைசெய்யும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார். மற்ற நாடுகளும் இவரைப்போல, யானைத்தந்த விற்பனையை முற்றாக தடைசெய்தால் ஆப்ரிக்க யானைகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்கிறார்கள் வலவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...