Apr 11, 2013

இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி அசத்தும் அமெரிக்க சிறுவன்!

american teenagerஅமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது சிறுவன், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறான். நியூயார்க்கைச் சேர்ந்த திமோதி டோனருக்கு, சிறுவயது முதலே பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் இருந்தது.
இதற்காக அவர் பெரிய பயிற்சி நிறுவனங்கள் எதையும் நாடவில்லை. மாறாக, அன்றாடம் தான் தொடர்பு கொள்ளும் நபர்கள் மூலமாகவே தனது மொழிப்பயிற்சியை வளர்த்திருக்கிறார். உள்ளூர் டாக்சி டிரைவர்களுடன் அடிக்கடி பேசுவது, ஓட்டல்களில் சந்திக்கும் நபர்களுடன் தொடர்ந்து பேசிப் பழகுதல் மற்றும் இ-மெயில் மூலம் உலகம் முழுவதிலும் உள்ளவர்களுடன் பழகி, அவர்களின் மொழியைப் பற்றி அறிந்துள்ளார்.
இவ்வாறு இந்தி, அரபு, குரோஷியன், டச்சு, ஆங்கிலம், பார்சி, பிரெஞ்சு, ஜெர்மன், ஹவுசா, ஹீப்ரு, இந்தோனேசியன், இஷிஹோசா, (தென் ஆப்பிரிக்க ஆட்சி மொழி), இத்தாலி, மாண்டரியன், ஒஜிப்வே (அமெரிக்க உள்ளூர் மொழி), பெர்சியன், பாஷ்டோ, ரஷ்யன், ஸ்பானிஷ், ஸ்வாஹிலி, துருக்கிஷ், வோலோப், யித்திஷ் என 23 மொழிகளையும் கற்றுத் தேர்ந்துள்ளான்.
அதன்பின்னர் டோனர் தனது மொழித் திறமையை வீடியோ பதிவுகளாக யுடியூப் மூலம் வெளியிட ஆரம்பித்ததால், அவரது பன்மொழித் திறமை உலகிற்கு தெரியவந்தது. இதனைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள், டோனரின் திறமையை பாராட்டி, ஊக்கம் அளித்துள்ளனர். அவற்றில் ஒரு வீடியோவில் 20 மொழிகளில் தொடர்ந்து பேசியதன் மூலம் டோனர் மிகவும் பிரபலம் ஆகியுள்ளான்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...