Apr 19, 2013

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் அச்சம்



ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் அச்சம்

டெக்ரான், ஏப்.19-

ஈரானில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் உருவானது. இது 5.2. ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர் ஆனால், இந்த தடவை நடந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

பூமிக்கு அடியில் 2.கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக டெக்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இதே பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் உருவானதால் மக்கள் அச்சத்துடன் உள்ளன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...