Apr 1, 2013

Lourdesவரலாறுகள் லூர்த் மாதா | Lourdes – வரலாறும் சுற்றுலாவும்! 01/04/2013 by PRABU in ஏனையவை, சுற்றுலா தளங்கள், மேலும், வரலாறுகள் with 0 COMMENTS புனித லூர்த்ஸ் மாதா திருத்தலம் ஃப்ரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் Midi-Pyrénées மாகாணத்தில் அமைந்துள்ளது. பரிஸில் இருந்து சுமார் 830 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இது ஃப்ரான்ஸிற்கு அதிக சுற்றுலா பயணிகள் வர காரணமாக அமைந்துள்ளது. புனித பெர்னாதத் (Saint Bernadette) என்பவருக்கு மாதா காட்சி கொடுத்த இடத்தை மையமாகக்கொண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

பெர்னாதத் 1844 ஆம் ஆண்டு தை மாதம் 7ஆம் திகதி பிரான்ஸுவா சுப்ரஸ் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். 1858 ஆம் ஆண்டு தனது 14 ஆவது வயதில் சகோதரி மற்றும் நண்பியுடன் மஸபியல் எனும் காட்டுப்பகுதியில் செல்லும் போது மாதா வெண்ணிற ஆடையுடனும் நீல நிற பட்டியுடனும் பாதங்களில் இரண்டு மஞ்சள் ரோஜாக்களுடன் காட்சி கொடுத்ததாக நம்பப்படுகிறது. 1858 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று கன்னிமேரி காட்சிகொடுத்த நாள் முதல் இன்றுவரை அக் குகையில் லட்சக்கணக்கான மெழுகுதிர்கள் ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது. இக் குகை 1858 ஆம்

ஆண்டு ஐப்பசி 5ஆம் திகதி முதல் நெப்போலியனின் கட்டளைப்படி பொதுமக்கள் பாவணைக்கு திறக்கப்பட்டுள்ளது. சர்வதேச புகழ்பெற்ற இந்த திருத்தலத்திற்கு வருடாந்தம் 50 லட்சம் மக்கள் பிரார்த்தனைக்காக வந்து செல்கிறார்கள். ஐப்பசி 15 ஆல் இத்திருத்தலத்தின் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆலையத்தின் வலப்பகுதியில் அமைந்துள்ள மலையில் திருச்சிலுவை பாதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலையத்தின் மாதா தாடகத்தில் மக்கள் புனித நீராடுகிறார்கள். இவ் நீர் உலகம் பூராவும் கத்தோலிக்கர்களால் புனித நீராக கருதப்பட்டு பேணப்படு... 

மூலம் : http://edu.tamilclone.com

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...