May 11, 2013

உலகப் பொன்மொழிகள்


1. அஞ்சக்கூடாத விஷயங்களுக்கு அஞ்சுபவர்களும் அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாதவர்களும் தீய பாதையில் செல்கிறவராகிறார்கள்!

-புத்தர்

2. குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்!

-கிருபானந்தவாரியார்

3. இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே; என்னால் இயலாது என்று ஒருநாளும் நினையாதே; நீ வரம்பற்ற வலிமையுடையவன்!

-விவேகானந்தர்

4. பிறருக்குச் சாத்தியமில்லாத ஆசைகளைக் கிளப்பிவிடும் விதத்தில் டாம்பீகமாக வாழ்வதே பெரிய சமூகத் துரோகம்!

-காஞ்சி ஸ்ரீசங்கராச்சாரியார்

5. துன்பம் நேரும்போது சிரிக்க வேண்டும்; துன்பத்தை வெல்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை!

-திருவள்ளுவர்

6. காரியங்களைப் பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர்!

-ஒளவையார்

7. சம்பாதிக்க வேண்டியவை எவை? கல்வி, செல்வம், புண்ணியம் ஆகியன!

-ஆதிசங்கரர்

8. ஒரு பொருள் மிக அற்பமாக இருந்தபோதிலும் ஒருவர் அதை இகழ்ந்து பேசலாகாது!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...