May 4, 2013

அழகுடன் கூடிய ஆரோக்கியமான சருமத்தை தரும் வைன்!

News Serviceஒயின் ரொம்ப பிடிக்குமா? அதனால நல்லா இளமையாகவும், பொலிவோடும் இருக்குறீங்களா? இதுல எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஒயின் குடித்தாலும், சருமத்திற்கு பயன்படுத்தினாலும், நல்ல பொலிவான சருமம் கிடைக்கும் என்று ஆய்வுகள் பல நிரூபிக்கப்பட்டுள்ளன. அதுவும் ஒயின் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, இருவருக்குமே நல்ல பலனைத் தரக்கூடியது என்றும் ரிச்சாட்டு ஏ. பாக்ஸ்டர் கூறியுள்ளார். அதுவும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இளமைத் தோற்றத்தை தக்க வைக்கக் கூடியது என்றும் அவர் கூறுகிறார். குறிப்பாக ஒயினில் ரெட் ஒயின் குடித்தால், அதன் நன்மையே தனி தான். அதிலும் தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், நல்ல ஸ்ட்ராங் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு அலர்ஜி மற்றும் இயற்கையான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலத்துடன் கலந்து வினைபுரிவதால், அவை பொலிவான சருமத்தை மட்டுமின்றி, சருமத்தை நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
   இளமைத் தோற்றம்
ஒயினில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால் இருப்பதால்,
அவற்றை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதிப்படைந்திருக்கும் செல்களை சரிசெய்து, முதுமைத் தோற்றத்தை தடுக்கும்.
முகப்பரு
பாலிஃபீனால் சருமத்தில் ஏற்படும் காயங்களை குறைக்கும். அத்தகைய பாலிஃபீனால், ஒயினில் இருக்கிறது. எனவே இதனை பருக்கள் அதிகம் இருப்பவர்கள் பயன்படுத்தினால், பருக்கள் இல்லாத சருமத்தைப் பெறலாம்.
வறட்சியான சருமம்
வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த பலனைத் தரக்கூடியது. அதுவும் அத்தகையவர்கள் ஒயினை சருமத்திற்கு பயன்படுத்தும் முன், ஒயினில் அதிகப்படியான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்களான சிட்ரிக், டார்டாரிக் மற்றும் மாலிக் ஆசிட் இருப்பதை வாங்க வேண்டும். இதனால் இவற்றை பயன்படுத்தும் போது, அது சருமத்தை ஈரப்பசையுடனும், மென்மையாகவும், குளிர்ச்சியுடனும் வைக்கும்.
சிறந்த டோனர்
ரெட் ஒயினை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். அதுவும் அதனை பஞ்சில் நனைத்து, சருமத்தை துடைத்தால், அவை சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு, மாசின்றி வைத்துக் கொள்ளும். மேலும் பருக்கள் வராமலும் தடுக்கும்.
சூப்பர் ஸ்கரப்
ஒரு கப் வெள்ளை ஒயினை, ஒரு கப் தவிட்டுடன் சேர்த்து 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கொண்டு முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமத்துளைகளில் உள்ள மாசுக்கள் அனைத்தும் நீங்கிவிடுவதோடு, அதிகப்படியான எண்ணெயும் அகன்றுவிடும்.
சருமத்தை பாதுகாக்கும்
நியூசிலாந்தில் உள்ள ஏஜி ஆய்வுக்கூடம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், வெள்ளை ஒயின் சருமத்தை சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சிறந்த பாதுகாப்பு தரக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. எப்படியெனில் இவை சரும புரோட்டீன்களின் ஆக்ஸிஜனேற்றத்தை கணிசமாக குறைக்கக்கூடியது என்பதாலேயே ஆகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...