Jun 25, 2013

இந்தியா கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி?

கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி?டேராடூன்: உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலை ஒட்டி ஓடும் மந்தாகினி ஆற்றில் கேதார் பனிச்சிகரத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்ததால் வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது. இக் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் திசை திரும்பியதால் சுமார் 200 கிராமங்கள் அழிந்தேபோயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன என்பது தெரிய வில்லை. கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி? கேதார்நாத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள், வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. கேதர்நாத் சிவாலயத்துக்கு வருபவர்களை சுற்றிக்காட்ட 4700 சுற்றுலா வழி காட்டிகள் இருந்தனர். வாகன ஓட்டுனர்கள் 500 பேரும், பூசாரிகள் 100 பேரும் ஓட்டல் தொழிலாளர்கள் சுமார் 700 பேரும் இருந்தனர். இவர்களில் ஆயிரம் பேர்தான் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மேலும் கேதார்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருந்த சிலைகள், லிங்கம் என எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...