Jun 18, 2013

நீங்கள் கணனியில் சேமித்து வைத்து நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள்,தரவுகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு விரலியில்(Pen drive) சேமிக்க உங்களை ஆச்சரியப்படுத்த விரைவில் வருகிறது கிங்க்ஸ்டனின் #1TB Flash drive

இந்த ஆண்டு மின்னணுவியல் கண்காட்சியில் கிங்ஸ்டன் நிறுவனம் தனது உலகின் மிக பெரிய கொள்ளளவு கொண்ட USB 3.0 விரலியை "DataTraveler HyperX Predator 3.0" என்ற பெயரில் வெளியிட்டது. இதன் கொள்ளவு 1 TB ஆகும், அதாவது 1,000GB என்று சொல்லலாம்.512GB கொள்ளளவு கொண்ட விரலி தற்போது சந்தையில் கிடைகிறது. 

கிங்ஸ்டன் தனது அறிக்கையில் DataTraveler HyperX Predator 3.0 விரலியின் எழுதும் வேகம் விநாடிக்கு 160MB தரவுகளையும் , வாசிக்கும் போது விநாடிக்கு 240MB தரவுகளையும் பரிமாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என சொல்கின்றது..

இதன் விலை தான் நமக்கு பெரிய ஏமாற்றம், இதன் விலைநிலவரத்தை வெளியிடாத கிங்ஸ்டன் தனது 512GB விரலியை சுமார் $1,750 விற்கிறது. அப்போ 1TB விலை நிச்சயமாக நாம் வாங்க முடியாத அளவில் இருக்கும் என்பது உறுதி.

இதன் உறை(Casing) நிலைப்பு தன்மை மற்றும் அதிர்ச்சி எதிர்ப்பு தன்மைக்காக துத்தநாகம் உலோக கலவையில் செய்யப்பட்டது. இது USB 2.0 வையும் ஏற்புடையதாக உள்ளது.

இந்த விரலி அனைத்து வகை விண்டோஸ் OS களிலும் இணக்கம்(compatible) கொண்டது.நீங்கள் கணனியில் சேமித்து வைத்து நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள்,தரவுகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு விரலியில்(Pen drive) சேமிக்க உங்களை ஆச்சரியப்படுத்த விரைவில் வருகிறது கிங்க்ஸ்டனின் #1TB Flash drive

இந்த ஆண்டு மின்னணுவியல் கண்காட்சியில் கிங்ஸ்டன் நிறுவனம் தனது உலகின் மிக பெரிய கொள்ளளவு கொண்ட USB 3.0 விரலியை "DataTraveler HyperX Predator 3.0" என்ற பெயரில் வெளியிட்டது. இதன் கொள்ளவு 1 TB ஆகும், அதாவது 1,000GB என்று சொல்லலாம்.512GB கொள்ளளவு கொண்ட விரலி தற்போது சந்தையில் கிடைகிறது.

கிங்ஸ்டன் தனது அறிக்கையில் DataTraveler HyperX Predator 3.0 விரலியின் எழுதும் வேகம் விநாடிக்கு 160MB தரவுகளையும் , வாசிக்கும் போது விநாடிக்கு 240MB தரவுகளையும் பரிமாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என சொல்கின்றது..

இதன் விலை தான் நமக்கு பெரிய ஏமாற்றம், இதன் விலைநிலவரத்தை வெளியிடாத கிங்ஸ்டன் தனது 512GB விரலியை சுமார் $1,750 விற்கிறது. அப்போ 1TB விலை நிச்சயமாக நாம் வாங்க முடியாத அளவில் இருக்கும் என்பது உறுதி.

இதன் உறை(Casing) நிலைப்பு தன்மை மற்றும் அதிர்ச்சி எதிர்ப்பு தன்மைக்காக துத்தநாகம் உலோக கலவையில் செய்யப்பட்டது. இது USB 2.0 வையும் ஏற்புடையதாக உள்ளது.

இந்த விரலி அனைத்து வகை விண்டோஸ் OS களிலும் இணக்கம்(compatible) கொண்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...